
கடந்த 01-08-24 அன்று ஜித்தாவில் புறநகர் பகுதியான கும்ராவில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தமிழ்நாடு அரசின் அயலக அடையாள அட்டை இலவச பதிவு முகாம் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (தமுமுகவின் அயலக பிரிவு) ஜித்தா மேற்கு மண்டலம்,சவுதி அரேபியா, IWF மருத்துவ அணி செயலாளர் தாஹா தலைமையில் நடைபெற்றது.

இதில் கும்ரா, கிருனியா, மஹ்ஜர் பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்கு இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ஜித்தா நிர்வாகிகளான கீழை இர்பான், அப்துல் ஹலிம், அஸ்ரப், செய்யத் இஸ்மாயில் ஆகியோர் பதிவு செய்து கொடுத்தனர்.

இந்த நிகழ்வில் IWF ஜித்தா மண்டல தலைவர் அப்துல் மஜித், JTS பொறியாளர் காஜா மைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் கும்ரா கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அன்புடன் சிராஜ்
இது போன்ற வளைகுடா நாட்டின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Race Tamil News ( WhatsApp channel ) இணைந்து கொள்ளுங்கள்.
Comentários