top of page

சவுதி அரேபியா மேற்கு பகுதி தாயிப்ல் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நிர்வாகிகள்.

Writer: RaceTamil NewsRaceTamil News



கடந்த 01-09-23 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பின்

தாயிப் தமிழ் பள்ளிவாசலில் சகோதரத்துவம் என்ற தலைப்பில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் போரத்தின் சவுதி மண்டல ஒருங்கிணைப்பாளர் மீமிசல் நூர் முகம்மது உரையாற்றினார்.


சவுதி அரேபியாவில் ஹோட்டல் ஊழியர்கள் மூக்கைத் தொட்டால் 44,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்https://www.racetamilnews.com/post/restaurant-staff-found-nose-picking-in-saudi-could-cost-up-to-sr-2000



திராளாக தமிழ் மக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பிறருக்கு செய்யும் உதவிகளினால்

ஏற்படும் நன்மைகள் குறித்தும் பிறருடைய துன்பத்தை களைபவர்களின் துன்பத்தை வல்ல அல்லாஹ் மறுமையில் களைகிறான் என்பதை அவர் எடுத்துரைத்தார்.


இந்நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த மௌலவி அஜ்மி யூசுபி அவர்களுக்கு நன்றி தெரிவித்து நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. அதை தொடர்ந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சுமார் 200 பேருக்கு அருமையான மதிய உணவு வழங்கி மக்களை மகிழ்விக்கும் செயல்பாடுகளையும் தனியாக சுகாதார நிலையம் அமைத்து ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வரும் பணியையும் IWF நிர்வாகிகள் கேட்டு அறிந்து பாராட்டினார்கள்.





தொடர்ந்து இந்தியன்ஸ் வெல்ஃபேர் போரத்தின் தாயிப் நகர நிர்வாகிகளுடன் கலந்துரையாடி நாம் அமைப்பாய் திரள வேண்டியதன் அவசியத்தையும் அதன் மூலம் நம் மக்களுக்கு நாம் எவ்வாறு நற்பணிகள் செய்யலாம் என்பதையும் சவூதி மண்டல ஒருங்கிணைப்பாளர் விளக்கம் கொடுத்து எதிர் வரும் நாட்களில் நடத்த திட்டமிட்டுற்கும் ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்து நிறைவு செய்தார்.


இந்நிகழ்வில் மேற்கு மண்டல செயலாளர் கீழை இர்பான், மேற்கு மண்டல மருத்துவ அணி செயலாளர் மங்களக்குடி தாஹா ரசூல் ஆகியோர் உடன் இருந்தனர்


அன்புடன்,


இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)

ஜித்தா மேற்கு மண்டலம்,

சவூதி அரேபியா.


Comments


bottom of page