கடந்த 02-08-24 அன்று ஜித்தா மூவன்பிக் நட்சத்திர அரங்கில் மதிப்பிற்குரிய இந்தியன் கவுன்சில் ஜெனரல் முஹம்மது ஷாஹித் ஆலம் சாஹிப் அவர்களுக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.
60 க்கு மேற்பட்ட இந்திய அமைப்புகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் IWF ஜித்தா மண்டல தலைவர் காரைக்கால் அப்துல் மஜித் மற்றும் செயலாளர் கீழை இர்பான் கலந்து கொண்டு கவுன்சில் ஜெனரலுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதில் ஜித்தா தமிழ் சங்கத்தின் (JTS ) மூத்த நிர்வாகி சிராஜ் அவர்கள் கவுன்சில் ஜெனரலின் சிறப்பான கடந்த கால சேவைகளை குறிப்பிட்டு நன்றிகளை தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
மேலும் JTS, SNM, NRTIA ஆகிய தோழமை அமைப்புகள் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தகவல் :
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்
(தமுமுகவின் அயலக பிரிவு)
ஜித்தா மேற்கு மண்டலம்,
சவுதி அரேபியா.
அன்புடன் சிராஜ்
இது போன்ற வளைகுடா நாட்டின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Race Tamil News ( WhatsApp channel ) இணைந்து கொள்ளுங்கள்.
Comentarios