top of page

டியூன்ஸ்‌ அல் ஜுபைல்‌ சர்வதேசப் பள்ளியின்‌ இடைநிலைக்‌ கல்வி 2024 பத்தாம்‌ வகுப்பின்‌, முதல்‌ தொகுதி மாணவர்கள்‌ 100 சதவிகித முடிவுகளுடன்‌ சாதனை

டியூன்ஸ்‌ சர்வதேசப் பள்ளி,அல்‌-ஜுபைல்‌, பிப்ரவரி-மார்ச்‌ 2024 இல்‌ சிபிஎஸ்‌இ (நடுவண்‌ இடைநிலைக்‌ கல்வி வாரியம்‌) புது தில்லியால்‌ நடத்தப்பட்ட SSE 2024 (10 ஆம்‌ வகுப்பு) முதல்‌ தொகுதியின்‌ சிறப்பிற்குறிய தேர்வு முடிவுக்காக மாணவர்கள்‌, அவர்களது பெற்றோர்கள்‌ மற்றும்‌ ஊழியர்களை பாராட்டுகிறது.


ஓவ்வொரு ஆண்டும்‌ சுமார்‌ 30 நாடுகளில்‌ 30000திற்கும்‌ மேற்பட்ட பள்ளிகளில்‌ 10

மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்புத்‌ தேர்வுகளை நடத்தும்‌ புகழ்பெற்ற CBSE‌, புது தில்லி,

இந்தியாவுடன்‌ இப்பள்ளி இணைக்கப்பட்டுள்ளது என்று பள்ளி முதல்வர்‌ தாளாளரிடம்‌ தெரிவித்தார்‌. இடைநிலைப்‌ பள்ளித்‌ தேர்வு (SSE) என்பது

மாணவர்களின்‌ கல்விப்‌ பயணத்தில்‌ ஒரு முக்கியமான மைல்கல்‌ ஆகும்‌, இது

இடைநிலைக்‌ கல்வியை நிறைவுசெய்து, மேனிலைப்‌ பள்ளிக்கு மாறுவதற்கான

அவர்களின்‌ தயார்நிலையைக்‌ குறிக்கிறது.


டியூன்ஸ்‌ சர்வதேசப் பள்ளி அல்‌ ஜுபைல்‌,சவுதி அரேபியாவின் ‌முதல்‌ தொகுதி மாணவர்கள்‌ SSE 2024 தேர்வை எழுதி, அதில்‌ 100 சதவீத முடிவுகளுடன்‌ அமோக வெற்றியைப்‌ பெற்றது பள்ளி மற்றும்‌ பெற்றோருக்கு மகிழ்ச்சியையும்‌

பெருமிதத்தையும்‌ தரும்‌ செய்தியாகும்‌. மேலும்‌, பிறருக்கு மத்தியில்‌, பள்ளிக்கும்‌ தமது பெற்றோருக்கும்‌ பெருமை சேர்க்கும்‌ விதத்தில்‌ விருதுகளை கொண்டு வந்து சேர்த்த அம்மாணவர்களின்‌ விவரம்‌:-


மொத்தமுள்ள 5 கட்டாயப்‌ பாடங்களில்‌, வைஷ்ணவி அஜித்‌: 94%, ஹலீமா தஹானி: 88%, அதிதி சின்ஹா: 86.4%, கனிஷ்‌ சீனிவாசன்‌: 84.8% மற்றும்‌ நூரா பாத்திமா 84.6 சதவிகிதமும்‌ பெற்றுள்ளனர்‌.


மேலும்‌ பாட வாரியாக, சமூக அறிவியலில்‌ 99, ஆங்கிலத்தில்‌ 95, அறிவியலில்‌ 95 மற்றும்‌ கணிதத்தில்‌ 94 ஆகிய மதிப்பெண்களுடன் வைஷ்ணவி அஜீத்‌ தேர்ச்சி பெற்றுள்ளார்‌. மேலும்‌ ஹலீமாதஹானி ஆங்கிலத்தில்‌ 95‌, இந்தியில்‌ 93 மதிப்பெண்கள் மற்றும்‌ அதிதி சின்ஹா பிரஞ்சு மொழியில்‌ 88 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்‌.


நிர்வாகமும்‌,ஆசிரியர்களும் மாணவர்களை கற்றல்‌ வாய்ப்புகளுக்காக ஊக்குவிப்பதன்‌ மூலமும்‌, தொழில்முறை வழிகாட்டுதலுடன்‌ கல்விக்கான வழிகாட்டுதல்களை

வழங்குவதன்‌ மூலமும்‌,முன்னேற்றப்‌ பயணத்தைத்‌ தொடர வாழ்த்து

தெரிவிக்கின்றனர்‌. மேலும்‌ இந்த தேர்வு முடிவு மாணவர்கள்‌, கல்வியாளர்கள்‌,

பெற்றோர்கள்‌ மற்றும்‌ நிர்வாகத்தின்‌ கூட்டு மற்றும்‌ ஒருங்கிணைந்த முயற்சிகளை

பிரதிபலிக்கிறது. வெற்றிகளைக்‌ கொண்டாடும்‌ போது, சவால்களை எதிர்கொள்வதும்‌, தொடர்ச்சியான முன்னேற்றங்களை நோக்கிச்‌ செயல்படுவதும்‌ இன்றியமையாதது.

மேலும்‌ எதிர்‌ வரவிருக்கும்‌ ஆண்டுகளில்‌ மாணவர்களை திறமையான,பொறுப்பான

குடிமக்களாக மாற்றுவதற்கும்‌ சிறந்த முடிவுகளை உருவாக்குவதற்கும்‌ பள்ளி

நிர்வாகம் மேலும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

அன்புடன் சிராஜ்

190 views0 comments

Comments


bottom of page