
துபாயில் கடந்த 2017 இல் தொடங்கப்பட்ட, உலகின் முதல் ஆளில்லா ஸ்மார்ட் காவல் நிலையங்கள் இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது மற்றும் இந்த 5 வருட காலப்பகுதியில் 363,189 பரிவர்த்தனை தகவல் மேற்கொண்டுள்ளது.
24 மணி நேரமும் பயனாளர்களுக்கு ஸ்மார்ட் சேவைகளை வழங்கும் முதல் ஸ்மார்ட் காவல் நிலையம் (SPS) திறக்கப்பட்ட ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி,உதவி துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் ஸ்மார்ட் காவல் நிலையங்களுக்கான அரசு மற்றும் தனியார் துறைக் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் அலி அகமது கூறியதில், மனித தலையீடு இல்லாமல் டிஜிட்டல் மாற்றம் மற்றும் ஸ்மார்ட் போலீஸ் சேவைகளைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

துபாய் குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த ஸ்மார்ட் காவல் நிலையங்கள் மூலம் மனித தலையீடு இல்லாமல் 24 மணி நேரமும் ஸ்மார்ட் போலீஸ் சேவைகளை எளிதாகப் பெறலாம்.
துபாயில் வசிப்பவர்கள் துபாய்நவ் செயலியில் சிறிய விபத்துகளைப் புகாரளிக்கலாம். குற்ற அறிக்கைகள் மற்றும் பிற சமூக அடிப்படையிலான சேவைகள் உள்ளிட்ட சேவைகளுடன் கூடிய ஸ்மார்ட் காவல் நிலையங்கள் துபாயில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன. இந்த நிலையம் அரபு, ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு மற்றும் ஜெர்மன் உட்பட ஏழு மொழிகளில் சேவைகளை வழங்குகிறது. எக்ஸ்போ 2020 இல் ஸ்மார்ட் காவல் நிலையங்களின் செயல்திறன் பாராட்டப்பட்டது.
Comments