top of page

துபாய் விமான நிலையம் 45 நாட்களுக்கு மூடப்படும்...?

Writer: RaceTamil NewsRaceTamil News

துபாய் விமான நிலையத்தில் வடக்கு ஓடு பாதையில் சரிபார்ப்பு இருப்பதால் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக 45 நாட்களுக்கு மூடப்படுவதாக விமான நிலையம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து விமான நிலைய ஆபரேஷன் கூறுகையில் , துபாய் இன்டர்நேஷனல் (DXB) வடக்கு ஓடுபாதை மே 9 முதல் ஜூன் 22 வரை அதாவது 45 நாட்களுக்கு "முழுமையான மறுசீரமைப்பு" செய்ய மூடப்படும் என்றும், இதனால் துபாயின் இரண்டாவது விமான நிலையமான வேர்ல்ட் சென்டரில் இருக்கும் துபாய் அல் மக்தும் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்படும். இந்த பராமரிப்பு பணி காரணமாக விமானங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார்.


அதைப்போல் கடந்த 2014ஆம் ஆண்டு வடக்கு ஓடுபாதை மறுசீரமைப்பு பட்டதாகவும், தெற்கு ஓடுபாதை 2019ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


துபாய் விமான நிலையங்கள் வாடிக்கையாளர் சேவையின் தரம் மற்றும் திறனை மேம்படுத்தவும், உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக அதன் நிலையைத் தக்கவைக்கவும், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும், தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது" என்று ஆபரேட்டர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். துபாய் இன்டர்நேஷனல் (DXB) வடக்கு ஓடுபாதை அடுத்த மாதம் 45 நாட்களுக்கு மூடப்படும் போது, ​​சில விமானங்கள் துபாய் வேர்ல்ட் சென்ட்ரலுக்கு (DWC) திருப்பி விடப்படும்.


மேலும் ஃபிளை துபாய் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, துபாய் விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதை மூடப்படுவதால் துபாய் விமான நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு இலவசமாக 30 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படும் என துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.


மேலும் ஃபிளை துபாய் விமான நிறுவனமானது, அல் மக்தும் விமான நிலையத்திலிருந்து 34 இடங்களுக்கு விமான சேவைகளை இயக்கப் போவதாக தெரிவித்துள்ளது.


அதன்படி , அல் மக்தும் விமான நிலையத்தில் இருந்து ஃபிளை துபாய் செல்லும் இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


அடிஸ் அபாபா, அகமதாபாத், அலெக்ஸாண்ட்ரியா, அல்உலா, பஹ்ரைன், சட்டோகிராம், சென்னை, தம்மம், டெல்லி, டாக்கா, தோஹா, என்டபே, பைசலாபாத், ஹைதராபாத், ஜெட்டா, கராச்சி, காத்மாண்டு, கார்ட்டூம், கொச்சி, கொல்கத்தா, கோழிக்கோடு, குவைத், லக்னோ, மதீனா, மஷாத், முல்தான், மும்பை, மஸ்கட், நஜாஃப், குவெட்டா, ரியாத், சலாலா, சியால்கோட் மற்றும் யான்பு ஆகிய இடங்களுக்கு செல்லும்.


ஓடுபாதை புதுப்பிக்கும் திட்டம் ஜூன் 22 அன்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, விமான நிறுவனம் DXB இலிருந்து அனைத்து இடங்களுக்கும் அதன் விமானங்களை மீண்டும் தொடங்கும்.


பயணிகள் சரியான தகவலை வைத்திருப்பதை உறுதிசெய்ய, பயணத்திற்கு முன்னதாக அவர்கள் புறப்படும் மற்றும் வருகை விமான நிலையங்களைச் சரிபார்க்க அறிவுறுத்தப் படுவதாக ஃபிளை துபாய் விமான நிறுவனம் கூறியுள்ளது.


Comments


bottom of page