
பன்னிரண்டு வயதான பியான்கா ஜெமி வாரியவா தான் ஆசைப்பட்ட பொருள் ஒன்றை வாங்குவதற்காக ஆறு வார கடின உழைப்பின் பலனாக பலன் கிடைத்தது. துபாயில் ஏழாம் வகுப்பு படிக்கும் பலனாக பலன் கிடைத்தது. துபாயில் ஏழாம் வகுப்பு படிக்கும் பியான்கா ஒரு மொபைல் போனை வாங்க ஆசைப்பட்டால் ஆனால் தற்போதைய சூழ்நிலை காரணமாக, அவளது பெற்றோரால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் அவளுக்கு அந்த மொபைல் போனை வாங்க வேண்டும் என்று ஆசை இருந்து கொண்டே இருந்தது. திடீரென அவளுக்கு ஒரு யோசனை வந்தது. பியான்காவின் தாய் ஜெமினி வாரியவா ஒருமுறை ரொட்டியை தயாரித்து, தனது மதிய உணவுக்காக லஞ்ச் பாக்ஸில் அடைத்து தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கூறினார். நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட பியான்காவின் ரொட்டியின் சுவை மற்றும் பஞ்சுபோன்ற தன்மையை நண்பர்கள் விரும்பினர். இதனால் இந்த ரொட்டியை அடுத்த நாளும் கொண்டு வருமாறு நண்பர்கள் கேட்டுவிட்டார்கள்.
அப்போது அவளுடைய நண்பர்களில் ஒருவர் அவளுக்கு ஒரு யோசனை சொன்னார் ரொட்டி இலவசமாகக் கொடுப்பதற்குப் பதிலாக, அவற்றை ஏன் நீ விற்கக்கூடாது? இதனால் உன்னால் சம்பாதிக்க முடியும், சம்பாதிக்கக்கூடிய பணத்தில் ஐபோன் 14 ஐ வாங்க முடியும் என்பதை வியங்கா உணர்ந்தாள் .

பியான்காவின் பெற்றோர் இருவரும் துபாயில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிந்த நிபுணர்கள். சொல்லப்போனால், அவர்கள் சமையலறையில் வேலை செய்வதை பார்த்துத்தான் அவள் வளர்ந்தாள். அவள் ரொட்டி விற்கும் திட்டத்தை பெற்றோர்கள் அறிந்ததும் அவளுக்கு எல்லா வழிகளிலும் ஆதரவளித்துள்ளார்கள். அவளின் தந்தை 100 திர்ஹம்ஸின் அவளுக்கு ஆரம்ப மூலதனத்தை வழங்கினார், மேலும் அவரது தாயார் அவருக்கு பேக்கிங் நிபுணத்துவத்தை சொல்லிக் கொடுத்தார்.

பியான்கா நான்கு ரொட்டித் துண்டுகளை Dh10 க்கு விட்டு அடுத்த இரண்டு ஆர்டர்களை மட்டுமே பெற்றால் , அவள் அறிந்த அடுத்த விஷயம், அவள் ஒரு நாளைக்கு சராசரியாக 60 ரொட்டி துண்டுகளுக்கு மேல் டார்கெட் வேண்டும் என டார்கெட் பிக்ஸ் பண்ணினாள். இதற்காக அவள் படிப்பையும் விடவில்லை பள்ளிக்கூடத்திற்கு போயிட்டு வந்த வீட்டு பாடங்கள் எல்லாம் முடித்துக் கொண்டு மாலையில் ரொட்டி சுட தொடங்கினாள்.
கிட்டத்தட்ட அவளுக்கு ஆறு வாரத்தில் 3,000 திர்ஹம் மதிப்புள்ள ஐபோன் 14 ஐ வாங்கும் அளவுக்கு பணம் கிடைத்தது இதனால் அவளது ஆசையும் நிறைவேறியது.

பள்ளியில் விற்பனை செய்வது எளிதானது அல்ல. ஒரு கட்டத்தில், அவள் கேலி கிண்டலுக்கு ஆளானால்.
"ஒரு சில மாணவர்கள் என்னை இழிவாகப் பார்த்தார்கள். அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர், 'ரொட்டி விற்பதை விட அவளால் ஏன் நேரடியாக தனது பெற்றோரிடம் தொலைபேசியைக் கேட்க முடியாது?' அவர்கள் எங்கள் நிதி நிலையைக் கூட கேள்வி எழுப்பினர்" என்று பியான்கா கூறினார்.
"ஆனால் நான் கவனம் செலுத்தி, எனது இலக்கை அடையும் வரை தொடர்ந்தேன். எனது பெற்றோர், வகுப்பு தோழர்கள், ஆசிரியர்கள் மற்றும் அயலவர்கள் என்னை ஊக்கப்படுத்தினர், அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்."

பியான்கா தனது தொழில் முனைவோர் பயணத்தைத் தொடர சபதம் எடுத்து அவளுடைய அடுத்த இலக்கு? தன் சொந்த பேக்கரி மற்றும் காபி கடை திறக்க வேண்டுமென்று.
ஜெமினி ஒரு பெருமைக்குரிய தாய், பியான்காவின் கதை இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் என்று கூறுகிறார்." இதற்காக அவர் கடினமாக உழைத்ததால் புதிய தொலைபேசியை அவர் உண்மையிலேயே மதிக்கிறார்."
Comments