
ஜெத்தா- பன்னாட்டு இந்திய பள்ளி ஜெத்தா கிளையின் (ஐ.ஐ.எஸ்.ஜே) புதிய தலைவராக டாக்டர் முகமது அப்துல் சலீமை நியமிப்பதாக சவூதி கல்வி அமைச்சகம் கடிதம் வழங்கியுள்ளது. அதன்படி பிப்ரவரி 26, 2025 புதன்கிழமை அன்று முறைப்படி அவர் பதவி ஏற்றார்.
ஹைதராபாத் தெலுங்கானாவை சேர்ந்த முகமாற்று அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் முகமது அப்துல் சலீம், இதற்கு முன்பு பள்ளி நிர்வாகக் குழுவின் கல்வி மற்றும் நிர்வாக துணை குழுவில் பணியாற்றியிருந்தார்.
தற்போது அவருடன் டாக்டர் பிரின்ஸ் முப்தி ஜியா, டாக்டர் ஷாஃபி, டாக்டர் ஜுபைர், டாக்டர் ஹேமலதா, டாக்டர் பர்ஹீன் தாஹா, டாக்டர் நுஸ்ரத் ஆகியோர் பள்ளி நிர்வாகக் குழுவில் உறுப்பினர்களாக தொடர்ந்து கடமையாற்றுவார்கள்.
அன்புடன் M Siraj
Comments