தமிழால் இணைவோம் தமிழர்கள் சங்கமித்த இப்தார் நிகழ்ச்சி
ஏக இறைவனின் திருப்பெயரால் திமுக அயலக அணி சார்பாக ரியாத் மத்திய மண்டல புலம்பெயர் தமிழர் இந்தியர்கள் சங்கம் NRTIA (NON RESIDENT TAMIL INDIAN ASSOCIATION) நடத்திய மாபெரும் சமூக நல்லிணக்க இப்தார் (எனும்) நோன்பு திறப்பு நிகழ்ச்சி கடந்த 18.04.2023 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணி முதல் தமிழர்கள் ஒன்று கூடி ஹோட்டல் அப்பல்லோ டிமோராவில் ஏற்பாடு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் NRTIAவின் அமைப்பாளர் பிரேம்நாத் தலைமையிலும் NRTIAவின் துணை அமைப்பாளர் மருத்துவர் சந்தோஷ் முன்னிலையிலும் NRTAவின் ரியாத் குழு தலைமை ஆலோசகர் திரு. ஜவஹர், ரியாத் ஒருங்கிணைப்பாளர் ஜனார்தனம், ரியாத் மண்டல தி.மு.க தலைவர் ஐயப்பாடி ஜாஹிர் உசேன், மண்டல துணை தலைவர் ஷேக் ஒலி, செயலாளர் சாமித்துரை, பொருளாளர் வெல்கம் ஆறுமுகம், துணை செயலாளர் ராஜேந்திரன், இளைஞர் அணி தலைவர் அப்துல் ரகுமான், இளைஞர் அணி செயலாளர் வாசிம் ராஜா, நகர தலைவர் மேலூர் மணியம், துணை நகர தலைவர் நவாஸ், கொள்கை செயலாளர் ஷாஜகான், தமிழ் கலாச்சார குழு தலைவர்கள் முருகவேல் மற்றும் டாக்டர் சலீம். ரஹமத் அலி, திரு. யாக ஜின்னா, திரு.ஆஷிக், திரு. ஹாஜா, ஆகியோர்கள் இதில் கலந்து கொண்டுள்ளார்கள்.
மகளிர் அணி சார்பாக மகளிர் குழுவின் அதிகாரம் மற்றும் மேம்பாடு அனைத்து உறுப்பினர் அணி மற்றும் இவ்விழாவில் நிறுவனத்தின் தலைமை விருந்தினர்கள் BREEZE COMPANY ன் நிர்வாக தலைவர் திரு.பைசல் மற்றும் Sat Cargo நிர்வாக தலைவர் திரு.சையத் ஆகியோரின் ஒத்துழைப்பில் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
இந்நிகழ்வில் மாஸ்டர், முகம்மது ஜெஸிம் கிராத் ஓதினார் (அரபு மொழி பிரார்த்தனை) மற்றும் ரியாத் மண்டல தி.மு.க தலைவர் ஐயப்பாடி ஜாஹிர் உசேன் கிராத் ஓதினார் (தமிழ் மொழி பெயர்ப்பு பிரார்த்தனையுடன்) நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து ரியாத் மண்டல இளைஞர் அணி தலைவர் அப்துல் ரகுமான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இவ்விழாவினை சிறப்பிக்க சிறப்பு விருந்தினர்களாக ஜித்தா தமிழ் சங்க நிர்வாகிகள். திரு. மஸ்தான், திரு. அஸ்லாம் பிரேம் நஜீர், இந்தியன் வெல்பேர் போரம் தலைவர் திரு. நூர் முஹம்மது , ரியாத் இந்தியன் அசோசியேஷன் தலைவர் திரு.அருண்குமார், வெளிநாடு வாழ் தமிழர் நல சங்கம் திரு. சையது மரக்காயர், இந்திய முஸ்லிம் லீக் திரு.இப்ராஹிம் அரசத். சமூக செயற்பாட்டாளர் ஜமால் சேட் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இதனைத்தொடர்ந்து NRTIAஅமைப்பின் துணை அமைப்பாளர் சந்தோஷ் NRTIA அமைப்பின் செயல்பாடுகளை மருத்துவர் விளக்கமாக எடுத்துரைத்தார். இறுதியாக இந்நிகழ்வில் மகளிர் அணியைச் சேர்ந்த திருமதி. சஜினா எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார்.
Comments