ஜெத்தா இந்தியத் துணைத் தூதரகத்தில் நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய கலாச்சாரம் மற்றும் தீபாவளிப் பண்டிகையின் உணர்வைக் கொண்டாடும் கலாச்சார நிகழ்ச்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், இந்திய பாரம்பரியம், கலாச்சாரத்தை விளக்கும் வகையில் பாரம்பரிய குத்து விளக்கு ஏற்றி தொடங்கப்பட்டது. பாரம்பரிய நடனங்கள் முதல், இன்றைய திரைப்பட நடனங்கள் வரை மக்களை வசீகரிக்கும் விதமாக குட் ஹோப் மற்றும் ஃபெனோம் அகாடமி குழுவினர் கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.
இந்த விழா ஜெத்தாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரை ஒன்றிணைத்து ஒற்றுமை மற்றும் தோழமை உணர்வை வளர்க்கும் விதமாக அமைந்தது. மேலும், சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
GIO ஏற்பாட்டுக் குழுவினைச் சார்ந்த சாந்தி மல்லேசன், சுபன், கெவின், சினேகா, அருண், ஜெய சங்கர், சுதாமா, பராக், பிரனேஷ், ஓம் பிரகாஷ், பாஸ்வதி, தேபாசிஸ், அங்கித், கார்த்திக், ரேவதி, ஸ்ரீதா, நமிதா, லக்ஷ்மிராஜ், கணேஷ் லிங்க, கவிதா, விஷால், மிருத்யுஞ்சயா, பிரசாந்த், பாட்ஷா, முபீன், சந்தோஷ், ஹிராம்பா, நாகராஜ், உஜ்வால், வஞ்சா ஆகியோர் மருத்துவர் அலோக் திவாரியின் ஆகியோரின் வழிகாட்டுதலில் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது.
மேலும், வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதியன்று ஜெத்தாவில் "மீடியா ஒன்" மூலம் நடக்க இருக்கும் "ஹாலா ஜெத்தா" என்ற மெகா நிகழ்வு குறித்து ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகி திரு. சிராஜ் மற்றும் ஜிஐஓவின் நிர்வாகி திரு. மல்லேஷ் ஆகியோர் மீடியா ஒன் குழுவுடன் கூட்டாக அறிவித்தனர்.
GIOவின் மத்திய கிழக்கு மண்டலத் துணை தலைவர் திரு. மல்லேஷ், அனைத்து பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அன்புடன் M.Siraj
Comentarios