ரியாத்தில் வாகன ஓட்டுநராக பணி புரிந்த அம்மாபாளையம்,பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திரு. மூர்த்தி பெருமாள் அவர்கள் செப்டம்பர் 07, 2024 அன்று மாரடைப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார்.
#NRTIA வின் ரியாத் மண்டல தலைவர் DR.சந்தோஷ் மற்றும் அப்துல் ரகுமான் உதவியுடன் அனைத்து ஆவணங்களையும் சேகரித்து இந்திய தூதரகத்தின் உதவியுடன் சம்பந்தப்பட்ட துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு திரு மூர்த்தி பெருமாள் உடலை இந்திய தூதரகம், சுகாதார அமைச்சகம் மற்றும் காவல்துறை உதவியுடன் 09.10.2024 அன்று தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு பயணத் தடையும் அவர்மீது அபராத தொகையும், மற்றும் மருத்துவமனை சிலவும் இருந்தது. எல்லா வகையான பிரச்சினைகளும் இந்திய தூதரகத்தின் உதவியுடன் நிறுவனத்தின் உதவியோடும் NRITA வின் துணை அமைப்பாளர் டாக்டர் திரு.சந்தோஷ் அவர்களின் அயராத முயற்சியினால், மிக வேகமாக முடித்து வைக்கப்பட்டது.
திரு. சந்தோஷ் NRTIA அவர்கள் இறந்நவரின் குடும்ப உறவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பதற்கும் மற்றும் Non Resident Tamils NRT CHENNAI அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம்"ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு தெரிவித்து அனைத்து உதவிகளும் செய்தார். இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த ஒருங்கிணைப்பாளர்: திரு. ஜனார்த்தனன் ரியாத் தலைவர்: திரு. ஆயப்பாடி ஜாகிர் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்: திரு வாசிம் ராஜா, இளைஞர் அணி செயலாளர்: திரு. அப்துல் ரஹ்மான் மற்றும் அனைத்து NRTIA உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
தகவல்:
Non Resident Tamil Indians Association (NRTIA)- Riyadh chapter வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் -ரியாத்
அன்புடன் M. சிராஜ்
Comments