.

வருகின்ற 77வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெத்தா தமிழ்ச் சங்கம் நடத்தும் சவூதி வாழ் தமிழ் மாணவ,மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி அறிவிப்பு.
போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும்.
பிரிவு 1
4ஆம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை
நேரம் : 3 மணித்துளிகளுக்கு மிகாமல்.
தலைப்பு
1. சுதந்திரத்திற்கு பாடுபட்ட இந்தியத் தலைவர்.
2. உலகம் புகழும் இந்திய விஞ்ஞானி
பிரிவு 2
7ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை.
நேரம்:
5 மணித்துளிகளுக்கு மிகாமல்.
தலைப்பு
1. சுதந்திர இந்தியாவில் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி
2. மரம் நடு; மழை பெறு.
மாணவ மாணவிகள் தங்கள் பேச்சை ஒரு காணொளியாக பதிவு செய்து (Editing not permitted) அனுப்ப வேண்டிய தொலைபேசி எண்:
காணொளி வந்து சேர வேண்டிய கடைசி தேதி - ஆகஸ்ட் 13 நள்ளிரவு 12 மணிக்குள்.
காணொளியின் துவக்கத்தில் உங்கள் பெயர், தாய் தந்தை பெயர், படிக்கும் வகுப்பு மற்றும் பள்ளி பற்றி கூறிவிட்டு பேச்சை துவங்கவும்.
வெற்றி பெறும் மாணவ மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பபடும்.
அரேபியா வாழ் மாணவ மாணவியர் அனைவரும் பங்கு பெற்று பயன் பெற அழைக்கிறோம்.
ஜெத்தா தமிழ்ச் சங்கம் JTS
Comments