கடந்த 27-9-24 அன்று ஜித்தா மாநகரில் தமிழ் சொந்தங்களுக்காக பல்வேறு அம்சங்கள் நிறைந்த பல்சுவை நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் சமுதாய அமைப்புகளின் அவசியம் என்ற தலைப்பில் மமக பொதுச் செயலாளர்- மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் சகோதரர். ப. அப்துல் சமது MLA அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தன் உரையில் சமுதாய அமைப்பான தமுமுக மற்றும் அதன் அரசியல் பிரிவான மமகவின் அவசியத்தையும் அதன் மூலம் சமுதாயம் அடைந்த பயன்களையும் பட்டியலிட்டார். இத்தகைய அமைப்பில் அனைவரும் இணைந்து மேலும் வலுப்படுத்த கேட்டு கொண்டார். இந்நிகழ்வில் கடந்த ஆண்டு ஹாஜிகளுக்கு சேவைகள் செய்த மக்கா தன்னார்வலர்களுக்கு சிறப்பு விருதுகளும், கீழக்கரை சவூதி அசோசியேஷன் , காயல் நல மன்றம் மற்றும் செந்தமிழ் நல மன்றம் (SNM) ஆகிய அமைப்புகளுக்கு மனிதநேய பண்பாளர்கள் விருதுகள் வழங்கப்பட்டது.
மேலும் நம் பிள்ளைகளின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் கலை, கைவினை கண்காட்சி, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின. மேலும் தாயிப் தாவா சென்டர் அழைப்பாளர் மௌலவி அஸ்மி அப்துல் ஸலாம் யூசுபி அவர்கள் ஆண்களுக்கு மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி பரிசுகள் வழங்கினார். அடுத்து ஆஸிஜியா தாவா சென்டர் அழைப்பாளர் உஸ்தாத் ரியாசுதீன் சிற்றுறையாற்றினார்.
மேலும் பெண்கள் பகுதியில் பெண்களுக்காக வாழ்க்கைத் திறன் பயிற்சியாளர சகோதரி பானு ஹமீத் அவர்கள் பதின்பருவ பெண் குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு என்ற தலைப்பில் மனோதத்துவ பயிற்சி மற்றும் இதுதான் இஸ்லாம் - நாடகத்தை நடத்தி பெண்களின் கவனத்தை ஈர்த்தார்.
மேலும் ஜித்தா தமிழ் சங்கம் (JTS), NRTIA, இராமநாதபுரம் வளர்ச்சி குழுமம், ஜித்தா காரைக்கால் மக்கள், லால்பேட்டை ஜமாஅத்தார்கள் மமக பொதுச் செயலாளர்- சகோதரர். ப. அப்துல் சமது MLA அவர்களுக்கு பொன்னாடை போற்றி வரவேற்பளித்தனர். இறுதியாக IWF துணை செயலாளர் பொறியாளர் அப்துல் ஹலீம் நன்றியுரை மற்றும் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சிக்கு IWF நிர்வாகிகளான அப்துல் மஜித், செய்யது இஸ்மாயில், நீடூர் ரில்வான், அஹ்மத் பஷிர், முகவை அப்துல் சமது, பரமக்குடி செல்வக்கனி, இலியாஸ், பதுருதீன், தாஹா ரசூல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அல்லாஹ்வுக்கே
தகவல்: இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்
(தமுமுகவின் அயலக பிரிவு)
ஜித்தா மேற்கு மண்டலம்.
அன்புடன் M.சிராஜ்
Comentários