
ஜெத்தாவில் இந்திய கிறிஸ்தவ சமூகம் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி இந்திய துணைத் தூதரக வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடியது. விழாவினை இந்திய துணைத் தூதர் திரு. முகமது ஷாஹித் ஆலம் துவக்கி வைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். பின்னர் அவரது மனைவி டாக்டர் ஷகிலா ஷாஹித் ஆலம் அவர்கள் கேக் வெட்டி விழாவினை ஆரம்பித்து வைத்தார்.

புதிய வருடத்தை நம்பிக்கையுடன் வரவேற்கும் விதமாக, தூதரக அதிகாரி திரு. ஷாஹித் ஆலம் அவர்களும் அவரது மனைவியும் கூட்டாக 24 பலூன்களை வானத்தில் பறக்க விட்டனர். ஐசிசி தலைவர் அஜித் ஸ்டான்லி தலைமையிலான ஐசிசி பாடகர் குழுவின் மெல்லிசை வரவேற்பு பாடலுடன் நிகழ்ச்சிகள் அரங்கேறியது. செபியாச்சன் மற்றும் ஹனோக் அபினாயி தங்கள் கரோல் பாடல்களால் அனைவரையும் கவர்ந்தனர். கரோல் குழுவுடன் சாண்டா கிளாஸ் கிறிஸ்துமஸ் தாத்தாவின் திடீர் வருகை குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒரே மாதிரியாக மகிழ்வித்தது. பலரும் அவர்களின் குழந்தைப் பருவ கிறிஸ்துமஸினை நினைவூட்டுவதாக மகிழ்ந்தனர்.


மேலும் ஜெத்தாவில் புதிதாக துவங்க இருக்கும் குட் ஹோப் அகாடமி பார்வையாளர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை விநியோகித்தது. இறுதியில் சிறப்பான விருந்துடன் விழா நிறைவேறியது. விழாவினை வி.வி. வர்கீஸ், சுசீலா ஜோசப், பீட்டர் ரொனால்ட் மற்றும் ஜேக்கப் ஜார்ஜ் சான் ஆகியோருடன் இணைந்து நிகழ்வினை ஐசிசி திட்ட ஒருங்கிணைப்பாளர் மனோஜ் மேத்யூ சிறப்பாக ஒருங்கிணைத்தார். மேலும் ஜோசப் வர்கீஸ், நி ஜோசப், லிஜு ராஜு, ஷிபு ஜார்ஜ், சுனில் வர்கி, தங்கச்சன் சாமுவேல், தாமஸ் பி கோஷி, அனில், ரோஜி மத்தாய், ஜோஜி ஜார்ஜ், ரைஜு அலெக்ஸ், சோபின்குமார், ஜான்சன் வர்கீஸ், ஜிபு டாம், ராஜேஷ் கே அலெக்சாண்டர், அபி பிலிப், பாபு வர்கீஸ், தாமஸ் பிலிப் மற்றும் ஜோஸ் மேத்யூ ஆகியோரின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகள் இந்த விழாவை மேலும் சிறப்படைய செய்தது.
அன்புடன் சிராஜ்
Comments