
சவூதி அரேபியா அல்-அசாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சியானது அல்-அசா தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்றது.

அல்-அசா தமிழ்ச் சங்கம் செயற்குழு உறுப்பினர்கள் திரு. நாகராஜன் கணேசன் மற்றும் திரு. செந்தில் வடிவேல் ஆகிய இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவர்களை தொடர்ந்து திரு. சுரேஷ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பிறகு சிறப்பு விருந்தினர்கள் திரு. பிரேம் ஆனந்த் மற்றும் திரு. ஜஸ்டின் அவர்கள் கிறிஸ்துமஸ் திருநாளின் மாண்பினையும், தமிழர்களின் சிறப்பினையும் விளக்கினார்கள்.

நிகழ்ச்சியில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளானது திருமதி. அருணா நாகராஜன் மேற்பார்வையில் விழா குழு சார்பாக நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், அல்-அசா தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள் திரு. ரவூப், திரு. அசோக் மற்றும் திரு. ரமேஷ் அவர்கள் ஒருங்கிணைக்க திரு. நாகராஜன் கணேசன் நன்றியுரை வழங்கினார். தமிழர்கள் பலர் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை கொடுத்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் இனிப்புகளுடன் இரவு உணவு வழங்கப்பட்டது. கோபார் தமிழ்ச் சங்க தலைவர் திரு SKS சிக்கந்தர் பாபு அவர்கள் விழா சிறப்பாக நடக்க கோபாரில் இருந்து வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.
அன்புடன் சிராஜ்.
Comentarios