
ஷார்ஜா புத்தக கண்காட்சியில் ஒரு முக்கிய நிகழ்வாக, மன்சூர் பல்லூரின் "பாலஸ்தீனத்தின் அழுகைகள், மேற்கு ஆசிய சவால்கள்" என்ற தலைப்பில் மலையாள புத்தகம் வெளியிடப்பட்டது. நிரம்பி வழிந்த பார்வையாளர்கள் முன் நடைபெற்ற இந்த விழாவில், புத்தகத்தை ரமேஷ் சென்னிதலா வெளியிட, அதை யுடிஎஃப் கன்வீனர் எம். எம். ஹசன் பெற்று கொண்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய ரமேஷ் சென்னிதலா, ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக பாலஸ்தீன மக்களின் நீடித்த அழுகை உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது என்பதை வலியுறுத்தினார். அவர்களின் துன்பம் உலக அளவில் அமைதி நாடும் மக்களுக்கு ஒரு கடுமையான கவலையாக உள்ளது. மன்சூர் பல்லூரின் பணி பாலஸ்தீனிய ஒற்றுமையின் சக்தி வாய்ந்த வெளிப்பாடு என்றும் அதுவே காங்கிரஸ் கண்ணோட்டம் என்றும் எடுத்துரைத்தார்.
மன்சூர் பல்லூரின் திறமையே பாராட்டிய எம். எம். ஹாசன், உலகளாவிய விவகாரங்களில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராக அவர் இருக்கிறார் என்றும் குறிப்பாக, மலையாள தொலைக்காட்சி சேனலில் விவாதங்களின் போது மன்சூரின் நுண்ணறிவு அவரது எழுத்தின் ஆழத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரமாதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஷானி மோல் உஸ்மான், ஒய். ஏ. ரஹீம், மகாதேவன் வாழசேரி, எழுத்தாளர் மன்சூர் பல்லூர் உள்ளிட்ட புகழ்பெற்ற பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.
அன்புடன் சிராஜ்
எங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து அமீரகம், சவுதி, குவைத், ஓமன், பஹ்ரைன் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள் https://whatsapp.com/channel/0029VaDyDs0DzgT4vRhiAb16
Comments