
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா 05 ஜூன் 2023 அபகாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவின் தொடக்கமாக சவுதி அரேபியா NRTIA அபஹா தென்மண்டலம் சார்பாக அதன் அமைப்பாளர் திரு முருகதாஸ் அவர்கள் தலைமையில் அதன் நிர்வாகிகள் திருவாளர்கள் டேவிட் கமல்ஹாசன், இஸ்மாயில். தயா செபஸ்டின். கணேசன் முன்னிலையில் சவுதி கமிஷ் சிவில் மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கப்பட்டது.
இரத்ததான ஏற்பாடுகளை மருத்துவர் செல்வகுமார் அவர்கள் முன்னின்று நடத்தினார். இரத்த தானம் வழங்குவதில் திரளானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து கமிஷ் அப்ஸரா உணவகத்தில் மதிய விருந்தும் விழாவும் இனிதே முடிவடைந்தது.


Comments