சவூதி அரேபியா தாயிப்பில் கடந்த 9 ஜூலை 2023, ஞாயிற்றுக்கிழமை அன்று, தாயிப் நகர கிங் அப்துல் அஜிஸ் சிறப்பு மருத்துவமனையுடன் இணைந்து சவுதி அரேபியா United Tamil Sangam த்தின் ஒரு அங்கமான தாயிப் தமிழ்ச் சங்கம் இரத்ததான முகாம் ஒன்றினை சிறப்பாக நடத்தியது.
“தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்கா தெனின்”
- என்ற குறளுக்கு இணங்க தாயிப் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் தானத்தில் சிறந்த தானம், உயிர்காக்கும் இரத்த தானம் என்று சிறப்பாக நடத்தி காட்டினர்.
இதற்கு உதவி செய்த தாயிப் நகர கிங் அப்துல்அஜிஸ் சிறப்பு மருத்துவமனை அதிகாரிகளுக்கும் வாகனம் ஏற்பாடு செய்த திரு.தனராஜ் அவர்களுக்கும் தாயிப் தமிழ்ச்சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன் இந்த முயற்சி இனி வரும் காலங்களிலும் தொடரும் என்று உயர்மட்ட குழு உறுப்பினர் திரு.கார்த்திகேயன் தெரிவித்தார்.
Comments