
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில்
தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் நிதியுதவியுடன் மீன் கழிவு உரம் தயாரித்தல் மற்றும் உயிரி எரிபொருள், உயிர் எரிவாயு தயாரிப்பு குறித்த இரண்டு நாள் விரிவுரை மற்றும் பயிலரங்கம் 2023 அக்டோபர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடந்தது.

முதுகலை நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் ஏ.ஜோசப் ததேயுஸ் வரவேற்றுப் பேசினார். இளங்கலை அறிவியல், நுண்ணுயிரியல் துறையின் ஒருங்கிணைப்பாளரும் தலைவருமான டாக்டர்.எம்.ஆண்ட்ரூ பிரதீப் பயிலரங்கத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கினார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலாளர் டாக்டர்.எம்.தவமணி கிறிஸ்டோபர் கூட்டத்தில் வாழ்த்துரையாற்றினார்.

துவக்க விழாவிற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் கடலோர ஆய்வுத் துறை தலைவரும், இணைப் பேராசிரியருமான டாக்டர்.எம். ஆனந்த் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து மீன் கழிவு உரம் தயாரிக்கும் செயல்முறை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

இரண்டாம் நாள் தொழில்நுட்ப அமர்வில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கடல் மற்றும் கடலோர ஆய்வுகள் துறையின் கவுரவ பேராசிரியர் டாக்டர்.ஜே.ஜெரால்டு வில்சன் மீன் கழிவுகளில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும் முறை குறித்தும், மரக்காணம் அமேசிங் பயோடெக் பிரைவேட் லிமிடெட் பொது மேலாளர் டாக்டர்.பா.அசோக் குமார், மீன் கழிவுகளில் இருந்து உயிர் உரம் தயாரிப்பது குறித்தும் விளக்கினர். பயிற்சியில் 60 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிலரங்கத்தின் அமைப்புச் செயலாளர் திரு.ஜே.இம்மானுவேல் சுரேஷ் அவர்களின் நன்றியுரையுடன் பயிலரங்கம் நிறைவு பெற்றது.
Comments