top of page

NRTIA- Riyadh chapter (வெளிநாடுவாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் -ரியாத்) அயலக அணி மற்றும் ஜெத்தா தமிழ்ச் சங்கம் சார்பாக உதவி

Writer's picture: RaceTamil NewsRaceTamil News

வால்பாறை காஞ்சிமலை மேற்கு, வெள்ளமலை கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு சேர்ந்த பழனிவேலன் கஞ்சா மலைப் பிள்ளை சவுதி அரேபியா தபூக் பகுதியில் வேலை பார்த்து வந்தார். அவர் ரியாத் நகரில் மாரடைப்பால் மரணமடைந்தார். குடும்பத்தார்கள் விருப்பம் தெரிவித்ததின் அடிப்படையில் இறந்த உடலை இந்திய தூதரகம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மற்றும் காவல்துறை உதவியுடன் 16.02.2024 அன்று தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


திரு.ஜெய் சங்கர் ஜெத்தா தமிழ்ச் சங்கம், நிறுவனம் மூலம் ஆவணங்களைச் சேகரிப்பதில் தனது கடின உழைப்பைக் குறிப்பிட்டு, ஜெத்தா உள்ள இந்திய துணைத் தூதரகம் சமர்ப்பித்து, NOC பெற்றுக்கொண்டார்.


திரு.அனிலன், எவர்செண்டாய் நிறுவனத்தின் மனிதவள மேலாளர், மறைந்த பழனிவேலன் அவரது குடும்பம் உறவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பதற்கும் நிறுவனத்திடமிருந்து ஊதியத்தின் final settlement நிறுவனத்திலிருந்து குடும்பத்திற்கு கிடைக்க அவர் உதவினார்.


கடவுளின் சேவை பணியில் NRTIA Riyadh chapter,வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் -ரியாத் (அயலக அணி)* துணை அமைப்பாளர்: திரு. சந்தோஷ் பிரேம்ஒருங்கிணைப்பாளர் திரு. ஜனார்த்தனன்ரியாத் மண்டல தலைவர் திரு.ஐயப்பாடி ஜாக்ரி உசேன்இளைஞர் அணி செயலாளர்: திரு. அப்துல் ரஹ்மான்,அனைத்து NRTIA உறுப்பினர்கள் மற்றும் *திரு. ஜெய் சங்கர்* நிர்வாக உறுப்பினர் ஜெத்தா தமிழ்ச் சங்கம், அனைவரும் இணைந்து செய்த இந்த உதவிக்கு மறைந்த பழனிவேலன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.


அன்புடன் சிராஜ்

86 views0 comments

Comments


bottom of page