ஜெத்தாவில் பல்வேறு பள்ளிகளில் 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இந்திய மாணவர்களுக்கு மீடியா ஒன் சார்பில் மிக சிறப்பான பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மப்ரூக் வளைகுடா டாப்பர்ஸ் (Mabrook Gulf Toppers) என்ற பெயரில் ஜெத்தா சர்வதேச இந்தியப் பள்ளியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவை ஜெத்தா இந்தியத் துணைத் தூதரகத்தின் வர்த்தகம், பத்திரிகை தகவல் மற்றும் கல்ச்சுரல் கன்சுல் திரு. முஹம்மது ஹாஷிம் தொடங்கி வைத்தார்.
மக்கா உம்முல் குரா பல்கலைக்கழகம் பேராசிரியரும் ஆய்வாளருமான டாக்டர் கதீர் தலால் மலபாரி, ஜெத்தா இந்தியன் பள்ளியின் முதல்வர் டாக்டர். முகமது இம்ரான் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
மீடியா ஒன் விருது பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பயிற்றுவித்த ஜெத்தாவில் இருக்கும் பல்வேறு பாடசாலைகளின் பொறுப்பாளர்களும் விருதுகள் பெற்றனர். மேலும் ஜெத்தாவில் சமூக, கலாச்சார மற்றும் கல்வித் துறைகளில் பணியாற்றும் பல தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மீடியா ஒன் உயர் அதிகாரி ஃபசல் முஹம்மது வரவேற்க, மீடியா ஒன் மேற்கு மாகாண இணைப்பாளர் பஷீர் சுள்ளியன் நன்றியுரை ஆற்றினார்.
அன்புடன் சிராஜ்
Comments