
சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணாக்கர்களையும் அவர்கள் பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் ஜெத்தா தமிழ்ச் சங்கம் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து ஊக்குவிப்பது பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது.
அதை பின்பற்றி இந்த வருடம் ஜூன் 20 தேதி சாதனை படைத்த மாணவ மாணவியர்களை பாராட்டும் விழா ஜெத்தா லக்கி தர்பார் உணவக அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவை திரு. ஜெய்சங்கர் தொகுத்து வழங்க, திரு. காஜா மொஹிதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக இந்திய பன்னாட்டு பள்ளி துணை முதல்வர் திருமதி பாராஹ் மசூத், இந்திய பன்னாட்டு பள்ளி தமிழ் ஆசிரியைகள் திருமதி பென்சியா, திருமதி பானு ஹமீது, திருமதி ஆயிஷா சித்திகா, சவுதி கெசட் திரு ராம் நாராயண் மற்றும் சமூக ஆர்வாளர்கள் திரு. IWF அப்துல் மஜீத், SNM திரு ஷரீப் TNTJ அப்துல் முனாப் ஆகியோர் கலந்து கொண்டனர். சாதனை மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியும் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் ஒப்பற்ற சேவையை பாராட்டியும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்திய பன்னாட்டு பள்ளி மேல் மட்ட குழு உறுப்பினர் திருமதி ஹேமலதா மற்றும் மருத்துவர் ஜெயஸ்ரீ மூர்த்தி வாழ்த்துரை வழங்கினர் .
ஜெத்தா தமிழ் சங்கம் நிர்வாகிகள் திரு. மல்லப்பன் மற்றும் திரு முரளி மாணவ மாணவிகளை வாழ்த்தியும், ஜெத்தா தமிழ் சங்கம் எங்கனம் மாணாக்கர்களை ஊக்குவிக்க முயற்சிகளை எடுக்கிறார்கள் என்பதை பற்றியும், மறைந்த ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மரம் நடுவதை வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருப்பதன் அவசியத்தையும் எடுத்துரைத்தனர் .
ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் திரு சமீர் அவர்களுக்கு சவுதி அரசாங்கத்தின் "GACA Certified Commercial Drone Pilot" என்ற அனுமதி கிடைத்ததற்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொண்டனர்.
விழாவின் நிறைவில் திரு இஜாஸ் அஹ்மத் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் சிறப்பான விருந்து வழங்கப்பட்டது.
Comments