
கன்னியாகுமரியிலிருந்து கொச்சி வரை ஜெத்தாவில் வசிக்கும் வெளிநாட்டினரின் சங்கமான ஜே. டி. ஏ, வருடாந்திர பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வருடம் அநேக பொது நல தொண்டுகளும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடந்ததில் அதிகம் மகிழ்ச்சி அடைவதாக ஜே. டி. ஏ தலைவர் அலி தெக்குதோடு, கலாச்சார பிரிவு ஒருங்கிணைப்பாளர் நுஹ் பீமாபள்ளி மற்றும் தொண்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் மசூத் பாலராமபுரம் ஆகியோர் கலந்து உரையாற்றினார்கள்.

புரவலர்கள் நசீர் வாவக்குஞ்சு மற்றும் திலீப் தாமரக்குளம் கூறுகையில், இத்தகைய கூட்டங்கள் நாட்டின் கலாச்சார நெறிமுறைகளைப் புரிந்துகொள்வதற்கும், கடந்த தலைமுறையின் வாழ்க்கையை புரிந்துகொள்வதற்கும், நவீன காலத்தின் மதிப்புகளைப் புரிந்துகொள்வதன் மூலம் முன்னேற தங்கள் தயார் படுத்திக்கொள்ள உதவும் ஒரு முயற்சி என்று எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் தலைமை வகித்தார். நவாஸ் பீமாபள்ளி கூட்டத்தினரை வரவேற்க, மஜசாஹிப் ஓச்சிரா அறிமுக உரையை நிகழ்த்த, பொருளாளர் நௌஷத் பன்மனா நிதி அறிக்கையையும், மசூத் பாலராமபுரம் செயல்திறன் அறிக்கையையும் சமர்ப்பித்தனர். ஷிஹாப் தாமரக்குளம் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க , கதீஜா பேகம் நன்றி உரை நிகழ்த்தினார். சமுதாய அமைப்பை சேர்ந்த தலைவர்கள் சிராஜ், அயூப் பந்தளம், மற்றும் காஜா மொஹியுதீன் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

விமான நிறுவனங்களின் விமானக் கட்டண அதிகரிப்பு மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விதிக்கப்பட்ட பயனர் கட்டணத்திற்கு எதிரான தீர்மானத்தையும் ஜே. டி. ஏ முன்வைத்தது.

பொதுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, ஒருங்கிணைப்பாளர் நுஹ் பீமாபள்ளி தலைமையில் நடந்த இன்னிசை விருந்தில் புகழ்பெற்ற பாடகர்களான நுஹ் பீமாபள்ளி, ரஃபி ஆலுவா, ஆஷிர் கொல்லம், சவுண்ட் இன்ஜினியர் ஜெயன், அகிலா தாஸ், பாத்திமா, ஷாஜி காயங்குளம், அஃப்ரா ரஃபி, கதீஜா பேகம்,நூறு பாத்திமா பஷீர் ஆகியோர்
பாடல்களைப் பாடினார்கள். ஜின்னி மற்றும் லிசி வர்கீஸ் ஆகியோர் தொகுப்பாளர்களாக இருந்தனர்.
அன்புடன் சிராஜ்
コメント