top of page

ஜனாப் பஷீர் அஹ்மத்வின் உடல் சவுதி அரேபியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Writer: RaceTamil NewsRaceTamil News



அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உரித்தாகுக.

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் மற்றும் சவுதி கம்மேர்சியல் வங்கியில் வேலை பார்த்து வரும் மர்ஹூம் பஷீர் அஹமத் 22.04.2023 சனிக்கிழமை அபஹாவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.


தகவல் தெரிந்தவுடன் ஜித்தாவிலிருந்து பஷீரிடன் சென்ற சகோதரர் நியாஸ் அவர்களும், அபஹா தமிழ்ச் சங்க தலைவர் தி.மு.க அயலக அணி பொறுப்பாளர் திரு. முருகதாஸ் அவர்களும் விரைந்து சென்று அவரது உடலை அடக்கம் செய்வதற்கு ஆயத்தமானார்கள்.


அதனுடன் ஜித்தா ஹாஜா முஹையுத்தீனும் அபஹா சென்று மூவருமாக பெரும் முயற்சி எடுத்து போலீஸ், சிவில் டிபென்ஸ் மற்றும் ஹாஸ்பிடல் ஆவணங்கள் அனைத்தையும் பெற்று, பஷீர் அவர்களுடன் வேலை பார்த்த திரு. ரமணன் அவர்கள் சவுதி கம்மேர்சியல் வங்கியில் இருந்து தேவையான ஒப்புதல் கடிதம் பெற்று ஜித்தா தமிழ்ச் சங்கம் திரு. சிராஜ் அவர்களிடம் வழங்க, சிராஜ் அவர்கள் வெகு துரிதமாக இந்திய தூதரக சான்றிதழ் வாங்கி கொடுத்தார்.


24.04.2023 திங்கட்கிழமை மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு அபஹாவில் அன்னாருக்கு அல் ராஜிஹ் பள்ளியில் தொழுகை நடத்தப்பட்டு யமானி கப்ருதானில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.




வெகு துரிதமாக செய்யப்பட்டு அனைத்து வேலைகளும் விரைவில் செய்து முடித்த ஜித்தா திரு. ஹாஜா முஹையுத்தீன் (திமுக அயலக அணி), திரு. நியாஸ், திரு. முருகதாஸ் (தி மு க அயலக அணி), ரமணா (சவுதி கம்மேர்சியல் வாங்கி), திரு இஜாஸ் அஹ்மத் (ஜமால் முஹம்மது கல்லூரி முன்னால் மாணவர் அலும்னி ) மற்றும் திரு சிராஜ் (ஜித்தா தமிழ் சங்கம்), பஷீருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், அபஹாவிலுள்ள சகோ.முஹம்மது இக்பால், சகோ. நைனா முஹம்மது மற்றும் இதற்காக முயற்சிகள் மேற்கொண்ட அனைவருக்கும் பஷீரின் உறவினர்கள் நன்றியை தெரிவித்து கொண்டார்கள்.



コメント


bottom of page