திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முன்னாள் மாணவர் தினம் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டம்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முன்னாள் மாணவர் தினம் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டம் ஆகஸ்டு 15 ஆம் தேதி நடந்தது. ஜமால் முகமது கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு ஆகஸ்டு 15 என்பது எப்பொழுதும் இரட்டிப்பு மகிழ்ச்சி தான். உலகெங்கிலும் பரவி இருக்கும் முன்னாள் மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு வருடந்தோறும் சுதந்திர தினத்தன்று வருகை தந்து, தங்கள் பேராசிரியர்களையும், கல்லூரி நிர்வாகிகளையும் சந்தித்து தங்கள் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்வது வழக்கம். நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகம் சார்பில் முன்னாள் மாணவர் சங்கத்தின் நோக்கத்தையும், கல்லூரி மாணவர்கள் உலகம் பரந்து விரிந்து கல்லூரியின் பெருமை சாற்றுவதையும் எடுத்துரைத்தனர். முன்னாள் மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு மட்டுமன்றி, கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியும், வேலைவாய்ப்பினை வழங்கியும் உதவி வருவது குறித்து பாராட்டப்பட்டது.
விழாவில் திரு.சிராஜ், திரு.ரஹமுத்துல்லா ஆகியோர் ஜெத்தாவாழ் முன்னாள் மாணவர்கள் சார்பில் இந்த வருடத்திற்கான பங்களிப்பு கல்லூரி முதல்வரிடம் வழங்கினர். மேலும், வருடந்தோறும் சிறந்த முன்னாள் மாணவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்குவது வழக்கம். இந்த வருடம் தேர்ந்த எடுத்த சிறந்த முன்னாள் மாணவர்களில் ஒருவராக ஜெத்தாவில் வசிக்கும் முன்னாள் மாணவர் திரு.அன்வர் அவர்களுக்கு சிறந்த முன்னாள் மாணவருக்கான விருது வழங்கப்பட்டது.
Comments