top of page

அல்-அசா தமிழ்ச் சங்கம் சார்பில் பல சமயத்தினரும் பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி.

Writer: RaceTamil NewsRaceTamil News



சவூதி அரேபியா அல்-அசாவில் இஃப்தார் நோன்பு திறப்பு மற்றும் தமிழ் வருடப்பிறப்பு விழாவானது அல்-அசா தமிழ்ச் சங்கம் சார்பில் 14-04-2023 அன்று நடைபெற்றது. நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து அல்-அசா தமிழ்ச் சங்கம் செயற்குழு உறுப்பினர் திரு. செந்தில் வடிவேல் அவர்கள் வரவேற்புரை வழங்கினார், பிறகு சிறப்பு விருந்தினர் மௌலவி , திரு. அல்தாஃப் பாரூக் (இஸ்லாமிய மையம் அல்-அசா) அவர்கள் நோன்பின் மாண்பையும் மத நல்லிணக்கத்தின் சிறப்பினையும் விளக்கினார். அவரைத் தொடர்ந்து, முனைவர் திரு. நாகராஜன் கணேசன் அவர்கள் தமிழ் வருடப்பிறப்பு பற்றி சிறப்புரை வழங்கினார்.






இந்த நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கான குர்ஆன் வாசித்தல், திருக்குறள் ஒப்புவித்தல்,பேச்சுப் போட்டி, கட்டுரை எழுதுதல் மற்றும் பெரியவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகள் விழா குழு சார்பாக நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், அல்-அசா தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள் திரு.ரமேஷ், திரு.ரவூப், திரு. அசோக் அவர்கள் ஒருங்கிணைக்க திரு.முகம்மது சுபஹான் நன்றியுறை வழங்கினார்.



தமிழர்கள் பலர் குடும்பங்களுடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.









Comments


bottom of page