
துபாயில் உள்ள ஒரு வில்லாவை உடைத்து 45,000 திர்ஹம்கள் பணம், ரோலக்ஸ் வாட்ச் மற்றும் மொபைல் போன்கள் அடங்கிய பெட்டகத்தை திருடியதற்காக துபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் 35 வயதான அரேபியர் ஒருவர் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
மேலும் அவர் போலீஸ் அதிகாரிகள் தாக்கியதாகவும், அவர்களின் கடமைகளை செய்து விடாமல் தடுத்ததாகவும் குற்றவாளி மீது புகார் எழுந்துள்ளது.
இது குறித்து காவல்துறை அறிக்கையின் படி, வில்லாவின் உரிமையாளர் முன்னாள் போலீஸ் அதிகாரி, ஜூலை மாதம் அல் ரஃபா காவல் நிலையத்திற்கு இந்த புகார் வந்தது. அவர் வெளிநாட்டில் இருந்தபோது அல் மன்கூல் பகுதியில் உள்ள தனது வீட்டில் திருட்டு நடந்ததாகவும், இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 45,000 திர்ஹம்கள் பணம், ரோலக்ஸ் வாட்ச் மற்றும் மொபைல் போன்கள் அடங்கிய பெட்டகம் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
உடனே அப்பகுதியில் உள்ள வில்லாக்களில் நடந்த பல திருட்டுகள் குறித்து விசாரிக்க சிஐடி குழு நியமிக்கப்பட்டது. தீவிர தேடுதலுக்குப் பிறகு, அப்பகுதியில் இரவில் சுற்றித் திரிந்த சந்தேக நபரை அடையாளம் கண்டு குற்றவாளிகளை பிடித்துள்ளார்கள்.
போலீசார் குற்றவாளியை கைது செய்யும்போது குற்றவாளி எதிர்த்து நின்றதாகவும், மேலும் ஒரு அதிகாரியை தாக்கி காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் கைது செய்யப்பட்டு பொது வழக்கறிஞர் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Comentarios