ரியாத் இந்தியன் அஸோஸியேஷன் சார்பாக 06/12/2024(வெள்ளிக்கிழமை) பிரின்சஸ் நூரா பல்கலைக்கழகம் மருத்துவமனையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் சுமார் 113 தன்னார்வல இரத்த கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பம்சமாக பிரின்சஸ் நூரா பல்கலைக்கழகம் மருத்துவமனையில் இரத்த தானம் செய்யும் முதலாவது அஸோஸியேஷன் ரியாத் இந்தியன் அஸோஸியேஷன் ஆகும், மேலும் சிறப்பூட்டும் வகையில் மருத்துவமனையில் இருந்து கோரிக்கை வந்த 3 நாட்களில் ரியாத் இந்தியன் அஸோஸியேஷன் இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
இரத்ததான முகாமை ரியாத் இந்தியன் அசோசியேஷன் தலைவர் திரு.மாதவன் தொடங்கி வைத்தார், ஹுமானிட்டரியன் ஒருங்கிணைப்பாளர் திரு.சூரஜ் வல்சலா, செயலாளர் திரு.T.N.R நாயர் ஆகியோர் நிகழ்ச்சியை முன்னின்று ஒருங்கிணைத்தனர்,அவர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் திரு.எஸ்ஸகி, திரு.ஜோசப், திரு.அருண் குமரன், திரு.விவேக், திரு .மகேஷ், திரு.சினில், திரு.நிக்கில், திரு.பென்னி, திரு.பவாத், திரு.முத்துக்கண்ணன், திரு.சந்தீப், திரு.செங்குட்டுவன், திரு.பாஸ்கர், திரு.அருள் நடராஜன், திரு.கிஷோர் குமார், திரு.கிளீட்ஸ் ஆகியோர் செயல்பட்டனர்.
திரு.பீட்டர் அவர்கள் கல்ப் கேட்டரிங் கம்பெனியில் இருந்து அனைத்து தன்னார்வலர்களுக்கு சிற்றுண்டி(டேட்ஸ் பை) வழங்கினார்கள், அவர்களை ரியாத் இந்தியன் அஸோஸியேஷன் சான்றிதழ் வழங்கி கௌரவித்தது.
சோழா உணவகம் அனைத்து தன்னார்வலர்களுக்கு ஒரு வாரம் அவர்கள் உணவகத்தில், தன்னார்வலர்கள் அருந்தும் உணவின் மொத்த விலையில் 10% தள்ளுபடி என அறிவித்துள்ளது.
இரத்ததான முகாமில் கலந்து கொண்ட இரத்த கொடையாளர்கள் மற்றும் பிரின்சஸ் நூரா பல்கலைக்கழகம் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ரியாத் இந்தியன் அஸோஸியேஷன் நன்றி தெரிவித்தது.
Comentarios