
அப்துல் கலாம் விருது வழங்கும் விழாவில்
மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 97ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டினை தலைமையகமாக கொண்டு தமிழகம் முழுவதும் இயங்கிவரும் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு பல்வேறு வகையான விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பத்மஶ்ரீ பாலம் திரு.கல்யாணசுந்தரம் தலைமையேற்று சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார்.

விழாவில் சவுதி அரேபியாவின் ஜெத்தா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திரு.சிராஜ் மற்றும் முனைவர் ஜெரால்டு அவர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. கண் கவரும் கலைநிகழ்ச்சிகளுடன் நடந்த இந்த விழாவில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் ஜெயராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியினை ஹரி பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
Commentaires