top of page
Writer's pictureRaceTamil News

ரியாத்தில் கங்குவா படத்திற்கான விளம்பர நிகழ்ச்சி

சூர்யாவின் 'கங்குவா' நவம்பர் 14 ஆம் தேதி பல மொழிகளில் வெளியாகியது. KE ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் இந்த திரைப்படம் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ளது.

இந்தியாவின் பல நகரங்களில் நடந்த விளம்பர நிகழ்ச்சியைத் தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி ரியாத்தில் கங்குவா படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியை அன்சாரி மதார் அவர்களின் முயற்சியில் Olive Event Company, Emmotion மற்றும் Thambis இணைந்து ரியாத் மலாஸ் லூலூ மார்க்கெட் அரங்கத்தில் சிறப்பாக நடந்தது.

இதில் நடிகர் சூர்யா, நடிகர் பாபி தியோல் மற்றும் மற்ற படக்குழுவினர் பங்குகொண்டனர். செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் பாபி தியோல் அவர்களது ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் கங்குவா பற்றி கலந்துரையாடினர்.

முதன் முறையாக ரியாத்துக்கு வருகை தரும் சூர்யா, பாபி தியோல் மற்றும் அவரது குழுவினருக்கு ரியாத்தில் ரசிகர்கள் அதிக அளவில் குவிந்ததால் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


அன்புடன் M.Siraj

120 views0 comments

Comments


bottom of page