
நம் நாட்டில் செல்லப்பிராணிகளாக நாய் பூனை வளர்ப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அரபு நாடுகளை எடுத்துக் கொண்டால் சிங்கம் புலிகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார்கள்.
அதிலும் ஒரு சில சமயங்களில் வளர்ப்பவர்களுக்கு தெரியாமல் அந்த சிங்கம் புலி வீதிகளில் வீதி உலா வருவது அடிக்கடி நடந்து வருகிறது.
அந்த வகையில் குவைத்தில் சபா அல்-அஹ்மத் பகுதியில் உள்ள திறந்தவெளிப் பகுதியில் சிங்கக் குட்டி ஒன்று சுற்றித் திரிவதைக் கண்டு அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உள்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததும், காவல்துறை, பொது பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ரோந்துப் பணியாளர்கள் அந்த இடத்திற்குச் சென்று, குட்டி தெருக்களில் சுதந்திரமாக நடமாடுவதைக் கண்டு ஆச்சரியமடைந்ததாக ஒரு பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்தார். இளம் சிங்கம் உள்துறை அமைச்சகத்தின் ஆட்களால் கையாளப்பட்டு அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
Comments