
செப்டம்பர் 19 , வியாழன் கிழமை அன்று இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டலம் சார்பாக சமூக நல்லிணக்க கருத்தரங்கம் - மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் தலைமை தாங்க , மண்டல & கிளை நிர்வாகிகள் முன்னிலை வகிக்க சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி மண்டல துணை தலைவர் மௌலவி இப்ராஹிம் அன்வாரி அவர்கள் இறை வசனம் ஓதி அதற்கான தமிழ் விளக்க உரை வழங்க, மண்டல செயலாளர் நல்லூர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் வரவேற்புரை ஆற்ற இனிதே தொடங்க மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் கருத்தரங்கின் நோக்கம் குறித்து தலைமை உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தாயகத்திலிருந்து வருகை புரிந்த IPP மாநில செயலாளர் அப்துல் காதர் மன்ஃபஈ அவர்கள் அவர்கள் மாநபியின் மனிதநேய பண்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

ரியாத் மத்திய மண்டல சமூக சேவைகள் குறித்த காணொளி அனைவருக்கும் திரையிடப்பட்டபின் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் , மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் , தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் ப. அப்துல் சமது அவர்களை பற்றிய அறிமுக உரையை மண்டல துணைச் செயலாளர் அரசை ஆசிக் இக்பால் அவர்கள் சிறப்பாக வழங்க, ப. அப்துல் சமது அவர்கள் தாயகத்தில் நிலவி வரும் அரசியல் நகர்வுகள் குறித்து எடுத்துரைத்து, கழகம் ஆற்றி வரும் சமூக நல்லிணக்க பணிகள், நாம் அனைவரும் சமூக அக்கறை கொண்ட அமைப்பாக செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்து கூறி சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகளான அயலக திமுக சார்பாக Dr. சந்தோஷ் மற்றும் ஜாகிர் உசேன் , காயிதே மில்லத் பேரவை சார்பில் சகோ. அப்துல் நாசர், ப்ளீஸ் இந்திய அமைப்பு சார்பாக சகோ.லத்தீப் ஆகியோர் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தனர்.
அப்துல் சமது அவர்கள் வழங்கிய கேள்வி-பதில் நிகழ்ச்சி இந்நிகழ்வை மண்டல இணைச் செயலாளர் திருக்கோவிலூர் ஷாக்கீர் பேக் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார்.
நிறைவாக மண்டல மருத்துவ சேவை அணி செயலாளர் சிங்கம்புணரி சாகுல் அவர்கள் நன்றியுரையாற்ற இனிதே நிறைவடைந்தது.
தகவல் :
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF)
தகவல் தொழில்நுட்ப பிரிவு
மத்திய மண்டலம்
ரியாத் - சவூதி அரேபியா
அன்புடன் M. சிராஜ்
Opmerkingen