தமிழின் வளத்திற்காகவும், தமிழர் நலத்திற்காகவும் கடந்த 20 வருடங்களாக சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பேரமைப்பு ரியாத் தமிழ்ச் சங்கம்.

ரியாத் தமிழ்ச் சங்கத்தில் (2024-2025) ஆண்டுக்கான புதிய உயர்நிலைக் குழு பொறுப்பேற்றுக்கொண்டதை அடுத்து தனது முதல் நிகழ்வாக, சமூக அக்கறையைக் கருத்தில் கொண்டு 17/05/2024 (வெள்ளிக்கிழமை) அன்று மன்னர் பஹத் மருத்துவமனை வளாகத்தில் - "உதிரம் கொடுப்போம்! உயிரைக் காப்போம்! " என்ற திட்டத்தின் கீழ் இரத்ததான முகாம்
(குருதிக் கொடை நிகழ்ச்சி) ஒன்றை மிகச்சிறப்பாக நடத்தியது.

இந்த நிகழ்ச்சியை மரியாதைக்குரிய இந்தியத் துணை தூதர்
மேதகு அபு மாதேன் ஜார்ஜ்
(Hon'ble Abu Mathen George, DCM, Embassy of India, Riyadh) அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்பித்ததுடன் இரத்ததானமும் செய்து நிகழ்வுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார் என்பது மகிழ்வுடன் சொல்லத்தக்கது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுநல அமைப்புகளைச் சார்ந்த சகோதரர்கள் திரு. மீமிசல் நூர் முஹம்மது - IWF, திரு. மீராசாஹிப், திரு. செய்யது ஷபியுல்லாஹ் - RKWA மேலும் கிட்டத்தட்ட 84 சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள் அதிகமானோர் குருதிக் கொடையும் வழங்கினர்.

இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்த திருமதி. இந்திரா வெற்றிவேல், திருமதி. சுபத்ரா மாதவன், சிறுமிகள் ஷபானா, ருமானா உள்ளிட்ட மற்ற சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மன்னர் பஹத் மருத்துவமனை இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் Ms. Noura மற்றும் அவர்களின் குழுமத்தினர் அனைவரும் அனுசரணையோடும் அன்போடும் பணியாற்றினார்கள் என்பதைக் கூறுவதிலும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்தப் பாலை வெயிலில் தனது அன்பளிப்பாக காலை உணவாலும், குளிர்பானத்தாலும் நம் உடலைப் புத்துணர்வு கொள்ளச் செய்த DOSA Corner நிறுவனத்தார்க்கும் எங்கள் இதய நன்றி.
வந்தோர் அனைவரையும் படம் எடுக்க அழைத்த போதெல்லாம் சோர்வடையாமல் படம் பிடித்து அதை அதிவிரைவு முறையில் குருதிக்கொடை சான்றிதழாய்ப் பதிவேற்றம் செய்த திரு. முஹம்மது ஸெயித் அவர்களுக்கும்.
இம்மன்றத்தின் தலைவர் திரு. ஹைதர் அலி மற்றும் செயலாளர் திரு. சரவணன் சோமசுந்தரம் மற்றும் உயர்மட்டக்குழுவின் மேற்பார்வையில், சமூக சேவைக்குழுவுடன் இணைந்து நிகழ்ச்சி சிறப்பாக அமைய திறம்பட ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்ட திரு. இர்ஷாத் இப்ராஹிம், திரு. மாதவன், திரு. அபூபக்கர் சித்திக் அவர்களுக்கும், மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு அளித்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி.
அன்புடன்
ரியாத் தமிழ்ச் சங்கம்
Kommentarer