top of page

இந்திய துணை தூதர் திரு.மொஹமட் ஷாஹித் ஆலம் அவர்களுக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி

Writer's picture: RaceTamil NewsRaceTamil News

Updated: Aug 6, 2024

ஜித்தா மாநகரில் 02.08.2024, வெள்ளிக்கிழமை அன்றிரவு 7:30 மணி முதல் 11:00 மணி வரை தஹ்லியா விற்கு அடுத்து அமைந்துள்ள MovenPick என்ற நட்சத்திர விடுதியில் இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றிவிட்டு இந்திய நாட்டிற்கு திரும்ப இருக்கின்ற Mr. H. E. Mohamed Shahid Alam Consul General of INDIA, Jeddah அவர்களுக்கு Indian Community Jeddah சார்பாக ஏற்பாடு செய்திருந்த பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் NRTIA (Non-Resident Tamil Indians Association) சார்பாக தேரிழந்தூர் ஹாஜா முகைதீன்,

இராமநாதபுரம் சகோ. சீனி இப்ராஹிம், மற்றும் இராமநாதபுரம் சகோ. அமின் மூவரும் கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்து சிறப்பித்தோம்.

சவூதியின் NRTIA-வின் அமைப்பாளர் சேலம் சகோ. பிரேம்நாத் அவர்கள் அவசர தேவை கருதி தாயகம் சென்றுவிட்டதால் கலந்து கொள்ள முடியவில்லை.


60க்கும் மேற்பட்ட அமைப்புகளிலிருந்து கலந்து கொண்ட இந்த நிகழ்வில், தமிழக அமைப்புகள் பங்கேற்க ஜித்தா தமிழ் சங்கத்தின் மூத்த நிர்வாகி திருச்சி சகோ. சிராஜ் அவர்கள் முன்னேற்பாடுகளை செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்து கொண்ட தமிழக அமைப்புகள்

1. Jeddah Tamil Sangam (JTS)

2. ⁠Senthamil Nala Mandram (SNM)

3. ⁠Indians Welfare Forum (IWF)

4. ⁠Non-Resident TAMIL Indian Association (NRTIA)


ஜெத்தாவில் வசிக்கும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையுள்ள இந்திய பிரஜைகளில் 200க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வின் இறுதியில் சிறப்பான மற்றும் ருசி மிகுந்த இரவு விருந்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

NRTIA ன் சார்பாக

ஹாஜா முகைதீன்

And

Team of NRTIA

JEDDAH

Western Region

Kingdom of Saudi Arabia


அன்புடன் சிராஜ்


இது போன்ற வளைகுடா நாட்டின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Race Tamil News ( WhatsApp channel ) இணைந்து கொள்ளுங்கள்.

146 views0 comments

Comments


bottom of page