
சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் தமிழகத்தின் பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் அவர்கள் தலைமையிலான குழுவினரின் கலந்துரையாடல் நிகழ்வு செப்டம்பர் 29ஆம் தேதி அன்று ஜெத்தா தமிழ்ச் சங்கம் சார்பில் ஜெத்தா சன் செட் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜெத்தாவில் வசிக்கும் தமிழகத்தைச் சார்ந்த மக்கள் கலந்து கொள்ள மத்திய வருவாய் பிரிவினர்களின் நிதி மேலாண்மை மற்றும் பங்குச் சந்தை முதலீடு (Equity or share market), பத்திரங்கள் (Bonds), கால காப்பீடு (Term Insurance), மருத்துவ காப்பீடு(Medical Insurance) குறித்த பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Aionion அமைப்பின் சார்பாக திரு ஆனந்த் ஸ்ரீனிவாசன், திரு ராம்குமார், திரு அனிஷ் குப்தா, திரு ஷேக் அப்துல்லாஹ், திரு ஷேக் முபூஸ் மற்றும் திருமதி அகிலா சாரங்கபாணி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் திரு ஜெய் ஷங்கர் அவர்கள் வரவேற்புரை வழங்க, திரு மூர்த்தி, திரு ரியாஸ் சிராஜ், , திரு பார்த்திபன், திரு சுப்ரமணியம்,திரு ராமானுஜம் மற்றும் திரு காஜா மொஹிதீன் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். திரு காஜா மொஹிதீன் ஜெத்தா தமிழ் சங்கம் நண்பர்களை அறிமுகம் செய்ய, திருமதி அகிலா சாரங்கபாணி நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகள் திறம்பட ஏற்பாடு செய்த ஜெத்தா தமிழ்ச்சங்கம் திரு ஜெய் ஷங்கர் திரு மூர்த்தி மற்றும் திரு ரியாஸ் சிராஜ் மூவருக்கும் Aionion அமைப்பினர் நன்றியை தெரிவித்தனர்.
ஜித்தா தமிழ்ச் சங்கம்.
Comentários