ஜெத்தா நகரில் OICCயின் சவுதி மேற்கு மண்டல குழு சார்பில் உம்மன் சாண்டி அவர்களுக்கு இரங்கல் கூட்டம். இதில் கலந்து கொண்டு பேசியவர்கள் உம்மன் சாண்டி அவர்கள், ஜனநாயகத்தைப் புரிந்துகொண்டு ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களின் நலனுக்காக மட்டுமே பணியாற்றிய ஒரு சிறந்த தலைவர் எனவும், அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மக்களின் குறை கேட்டு அதை நிவர்த்தி செய்வதிலே செலவிட்டார் எனவும் ஏழைகளுக்காக இரவும் பகலும் தனது கதவுகளைத் திறந்து வைத்து லட்சக்கணக்கான மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்தார் எனவும் ஏழைகள் வாழ்வு மேம்பட என்ன செய்யலாம் என்று அன்றாடம் யோசித்தவர் எனவும், வெளிநாட்டு சிறைச்சாலையில் இருந்த கைதிகளை விடுவிப்பதிலும், வெளிநாடு வாழ் மலையாளிகளின் குறைகளை போக்குவதிலும் பெரும் பங்கு வகித்தவர் எனவும் புகழாரம் சூட்டினர்.
முன்னதாக, உம்மன் சாண்டியின் இறுதி சடங்குகள் இறுதி வரை நேரலை ஒளிபரப்பப் பட்டது. பின்னர், அவரது உருவப்படத்தற்கு மலர் மற்றும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது. OICC மண்டல குழுத் தலைவர் கே.டி.ஏ.முனீர் தலைமை தாங்க, இரங்கல் கூட்டத்தை, OICC மண்டல குழு பொதுச் செயலாளர் ஜாகீர் உசேன் எடவண்ணா தொடங்கி வைத்தார்.
அல் அபீர் மருத்துவக் குழுமத்தின் தலைவர் அலுங்கல் முகமது, கே.எம்.சி.சி. யின் தலைவர் அகமது பலாயத், நவோதயாவின் தலைவர் இஸ்மத் மம்பாத், ஷிஃபா ஜெத்தா மருத்துவக் குழும நிர்வாக இயக்குனர் பி.ஏ. அப்துல்ரஹ்மான் (ஃபைடா), பி.பி. ரஹீம், மிர்சா ஷெரீப், முசாஃபிர், மோகன் பாலன், ஜாபர் அலி பாலக்காடு, அபூபக்கர் அரும்பெற, சலா கரதன், நசீர் வாவா குஞ்சு, இக்பால் அலி தெக்குத்தொடு, நௌஷாத் அடூர், ஸ்ரீஜித் கண்ணூர், ஜெத்தா தமிழ்ச்சங்கம் காஜா மொஹியுதீன் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் உம்மன் சாண்டி அவர்கள் மே 2017 இல் அவர் ஜெத்தாவிற்கு வந்தபோது, மீட் தி லீடர் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட அதே மண்டபத்தில் அவரது இரங்கல் கூட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
留言