77வது இந்திய சுதந்திர தினம் மற்றும் சவூதி அரேபியா தேசிய தினத்தை
முன்னிட்டு ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) நடத்திய இரத்ததான முகாம்
77வது இந்திய சுதந்திர தினம் மற்றும் சவூதி அரேபியா தேசிய தினத்தை முன்னிட்டு
ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) - சுலை கிளை மற்றும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 08/09/2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை சுலை பகுதியில் நடமாடும் இரத்த வங்கி வாகனத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இரத்ததான முகாமிற்கான அறிவிப்பு செய்தவுடன் அயராத உழைப்பாலும் , தொடர் அழைப்பு பணியாலும் இறைவனின் கிருபையாலும் சுலை பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர் . மேலும் நேரமின்மை காரணமாக, இன்னும் பல சகோதரர்கள் இரத்ததானம் செய்ய முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் பரிசு பையுடன் வழங்கப்பட்டது.
முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும், காலை & மதிய உணவு ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், வாகன ரீதியாக உதவி செய்த சகோதரர்களுக்கும், ஊடக ரீதியாக உதவிய சகோதரர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும், இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், கிங் சவுத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், தண்ணீர், தேநீர், குளிர்பானம் மற்றும் பழங்கள் போன்றவைகளை ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், இந்த முகாம் சிறக்க எல்லா வகையிலும் உதவிய அனைத்து சகோதரர்களுக்கும், உணவு உள்ளிட்டவைகளுக்கு கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கிய அலங்கார் உணவகத்திற்கும், மண்டல & கிளை நிர்வாகிகளுக்கும், செயற்குழு & பொதுகுழு உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றும் சமுதாய பணியில் கடல் கடந்து.....
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ( IWF )
மத்திய மண்டலம்
ரியாத் - சவூதி அரேபியா
Comentarios