
75 வது குடியரசு தினம் ரியாத் இந்திய தூதரகத்தில் கொண்டாடப்பட்டது. தூதர் டாக்டர் சுஹேல் கான் மூவர்ணக் கொடியை ஏற்றி, மாண்புமிகு ராஷ்டிரபதி தேசத்திற்கு ஆற்றிய உரையை வாசித்தார். தேசபக்தி மற்றும் அபரிமிதமான பெருமிதத்தால் நிறைந்த இந்திய சமூகம் கொடியேற்றும் விழாவில் உற்சாகமாக பங்கேற்றது.
75-வது குடியரசு தின விழாவில் தமிழ் சமூகம் சார்பில் வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம்( NRTIA), Non-Resident Tamil Indian Association- Riyadh, இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF), ரியாத் இந்தியன் அசோசியேஷன் (RIA), ரியாத் தமிழ் சங்கம்(RTS), உலகளாவிய தமிழர் நல சங்கம்(UTNS). மற்றும் ஏராளமான இந்தியர்கள் இணைந்து கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் NRTIA ன் துணை அமைப்பாளர் திரு சந்தோஷ் பிரேம் அவர்கள். துணை ஒருங்கிணைப்பாளர் திரு. வஸிம்ராஜா அவர்கள் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய கமிட்டி செக்ரேட்டரி திரு. முருகவேல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அன்புடன் சிராஜ்
コメント