top of page

ரியாத்தில் தீ விபத்தில் இறந்த 2 தமிழர்கள் உடல் ஊருக்கு அனுப்பப்பட்டது ! அமைச்சர் நேரில் வருகை

Writer: RaceTamil NewsRaceTamil News



சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் கடந்த மே 4ஆம் தேதி லிட்டர்ஸ் எனும் பெட்ரோல் நிலையம் தங்கும் அறையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் உட்படபேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்கள். அவர்களில், கார்த்திக் S/o கண்ணையன்(வயது –40,) சீதாராமன் s/o ராஜகோபால் (வயது 35 ) சேலம் இவர்கள் இரண்டு பேரும் கடந்த மாதம் தான் புதிதாக வேலைக்கு வந்துள்ளார்கள் இன்னும் இவர்களுக்கான சவுதி அரேபியா இக்காமா அட்டை கிடைப்பதற்கு முன்பு துரதிஷ்டவசமாக இந்த சம்பவத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள்.



இச்சம்பவத்தை அறிந்ததும் விரைந்து சென்று துரித நடவடிக்கை எடுத்த NRTIA துணை அமைப்பாளர் சந்தோஷ் மற்றும் உறுப்பினர்கள் வாசிம் ராஜா, அப்துல் ரகுமான், முருகவேல், மற்றும் இம்ரான் ஆகியோர் கொண்ட குழு மற்றும் Riyadh KMCC பொறுப்பாளர் சித்திக், Malappuram KMCC, பொறுப்பாளர் ரஃபீக் மேச்சேரி NRTIA உறுப்பினர் சமூக சேவகர்.ஜமால் சேட் விரைந்து சென்று துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இந்திய தூதரகம் (ரியாத்) தூதர் டாக்டர். சுஹேல் அஜாஸ் கான் அவரது மேற்பார்வையில் செயலாற்றி உடலை கைப்பற்றி சவூதி அரேபியா அரசுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாரித்து சமர்ப்பித்தார்கள் பிறகு NRTIA & KMCC குழு தீவிரமாக பணியாற்றி அவர்களின் உடலை தமிழகத்திற்கு மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்ப முயற்சி மேற்கொண்டனர்.



இந்திய தூதரகம் (ரியாத்) மற்றும் சவூதி அரசு இணைந்து அவர்களின் உடலை 21.05 2023 SRILANKA AIRLINES முலமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.


அவர்களின் உடல் சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசின்உதவியுடன் அவர்களின் வீடுகளில் ஒப்படைக்க மதிப்பிற்குரிய அமைச்சர் மாண்புமிகு கே.எஸ்.மஸ்தான் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நேரடியாகச் சென்று உடலை பெற்றுக்கொண்டு இரங்கல் தெரிவித்தார் மற்றும் சென்னை முதல் சேலம் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தார்.


குடியுரிமை இல்லாத தமிழ் இந்தியன் சங்கம், மத்திய மண்டலம், ரியாத், சவுதி அரேபியா, முழு மூச்சுடன் எடுத்துக்கொண்ட இந்த முயற்சியை ஒருங்கிணைத்தவர் அயலக அணி தி.மு.க.வின் செயலாளர் மரியாதைக்குரிய திரு. எம்எம் அப்துல்லா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மதிப்பிற்குரிய திருமதி, ஜெசிந்தா லாசரஸ் தமிழ்நாடு மாநிலத்தில் மறுவாழ்வு இயக்குநர் அவர்களுக்கும் பிரேம் (NRTIA )மற்றும் சந்தோஷ் (NRTIA ) அவர்களுக்கு குடும்பத்தார் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.




Comments


bottom of page