
இவ்வருட ஹஜ் செய்யும் ஹாஜிகள் நலனுக்காக சவூதியில் TNTJ - ஜித்தா மண்டலம் நடத்திய 29வது இரத்ததான முகாம்.!
சவுதி அரேபியா ஜித்தாவில் ஹஜ் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பாக கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் (KAH), 29வது இரத்ததான முகாம் 31.05.2024 அன்று நடைபெற்றது.

இந்த முகாமில் சுமார் 76 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு 68 கொடையாளர்கள் தங்கள் குருதிகளை தானமாக வழங்கினார்கள்.
இந்த முகாமில் கலந்து கொண்ட தன்னார்வ கொடையாளர்கள், இம்முகாம் சிறப்பான முறையில் நடைபெற மருத்துவ குழுவினர்களை ஏற்பாடு செய்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல நிர்வாகிகள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
அன்புடன் சிராஜ்.
Comments