
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் அறிவுரைப்படி
தொடர்ந்து பல வருடங்களாக மரம் நடுவதை முழுவீச்சாக செய்துவருவது ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் சேவைகளுள் ஒன்று.
1. இந்த மாதம் 300+ மரங்கள் நடும் முயற்சியில் முதல்கட்ட நிகழ்வாக அயப்பாக்கம் குடியிருப்பு பகுதியில் 100 மரக்கன்றுகள் இந்த மாதம் (ஜூலை) 1 & 2 ம் தேதிகளில் மக்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஆதரவுடன் வெகு விமர்சியாக நடப்பட்டன.
2. அடுத்ததாக அரசு பள்ளி காட்டுப்பாக்கத்தில் 100 மரக்கன்றுகள் ஜூலை 15 & 16 தேதிகளில் நடப்பட்டன.
3. மூன்றாவதாக 153 மரக்கன்றுகள் சூரப்பேடு பிரிட்டானியா நகர் குடியிருப்பு பகுதிகளில் ஜூலை 22 & 23 தேதிகளில் நடப்பட்டன.
இவை அனைத்தும் வெற்றிகரமாக நடப்பட்டு, கூண்டு பொருத்தி, நீர் பாய்ச்சும் பணியை சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது.
நாங்கள் 300 மரம் நடுவதற்கு முயற்சி எடுத்த போதிலும் 353 மரங்களை நடுவதற்கு பொருள் உதவியாகவும், உடல் உழைப்பாகவும் பங்களிப்பு அளித்த ஜெத்தா தமிழ்ச் சங்கம், கலாம் இளம்தளிர், அல் ஹசா தமிழ்ச் சங்கம், ரியாத் தமிழ் குழுமம், அல்பஹா தமிழ்ச் சங்கம் &பிரிட்டானியா நகர் குடியிருப்போர் நல சங்கம், முகை தன்னார்வலர்கள் ஆகிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் தெரிவித்து கொள்கிறோம்.
வளமான பசுமையான தமிழகத்தை உருவாக்குவோம்.
மரம் நடு - மழை பெறு.
Comentários