
2023 ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா வருகை தந்த ஹாஜிகளுக்கு சேவையாற்றிய தன்னார்வலர்களை 22.09.2023 அன்று ஜெத்தா இந்திய துணை தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் மேதகு துணை தூதர் முஹம்மது சாஹித் ஆலம் அவர்கள் தன்னார்வலர்களின் சேவை பாராட்டி விருது மற்றும் நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

இந்திய துணை தூதரகம் டீம் இந்தியா (IPWF) சார்பாக நடந்த இந்நிகழ்வில் ஜெத்தா தமிழ்ச்சங்கம் தன்னார்வர்களின் சார்பாக பொறியாளர் காஜா மைதீன் அவர்கள் விருதினையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டார். இந்திய சமூகத்தின் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் IPWF தலைவர் ஜனாப் அயூப் ஹக்கீம் முன்னிலை வகித்தார்.
ஜெத்தா தமிழ்ச் சங்கம்
Comments