
அமீரகத்தில் 1980க்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டத்தில் மிகப்பெரிய மறுசீரமைப்பு அமைக்கப்பட்டது.அதன்படி ,வேலை வாய்ப்புகள் , நெகிழ்வு தன்மை, புதிய விதிமுறைகள், கூடுதல் விடுப்பு, முதலாளி தொழிலாளி இடையே பாகுபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான சட்டங்கள் என முக்கிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டது.இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் ஊழியர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.புதிய தொழிலாளர் சட்டம் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பொருந்தும்.
இந்த புதிய சட்டத்தால் அமீரகத்தில் அதிக வருடாந்திர விடுப்பு கிடைக்குமா? வீட்டில் இருந்து வேலை செய்ய முடியுமா? இல்லையென்றால் பகுதி நேர வேலை அனுமதிக்கப்படுமா? போன்ற எல்லா கேள்விகளுக்கும் பதில் இதோ
அமீரகத்தில் புதிய தொழிலாளர் சட்டம் எப்போது அறிவிக்கப்பட்டது?
இந்த புதிய தொழிலாளர் சட்டம் ஆனது அமிரகத்தில் செப்டம்பர் 20, 2021 ஆவணப்படுத்தப்பட்டு, நவம்பர் 15, 2021 பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது?
அமீரகத்தின் புதிய தொழிலாளர் சட்டம் 2002 பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வந்தது.
ஏன் இந்த புதிய தொழிலாளர் சட்டம் நடைமுறைக்கு வந்தது?
தொழிலாளர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு, வேலையில் நெகிழ்வுத் தன்மை, சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல், முதலாளி தொழிலாளி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்த சட்டத்தில் தொழிலாளர்களுக்கு முக்கிய மாற்றங்கள் என்ன?
தொழிலாளர்களுக்கு கூடுதல் விடுப்பு, வேலையில் நெகிழ்வுத் தன்மை, பணியிடத்தில் பாகுபாடு, தொழிலாளர்களை துன்புறுத்துதல், ஆகியவற்றை நிறுத்துவது பற்றி கூடுதல் விபரங்களை இந்த புதிய தொழிலாளர் சட்டத்தில் எதிர்பார்க்கலாம்.
இந்த சட்டத்தால் வருடாந்திர விடுப்பு எவ்வளவு கிடைக்கும் ?
பொதுவாக தனியார் துறை தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறையை பெறுவதற்கு உரிமை உடையவர்களாக இருப்பார்கள். இதன் மூலம் தொழிலாளியின் விருப்பப்படி வருடாந்திர விடுமுறை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
மகப்பேறு விடுப்பு :
தனியார் துறையில் வேலை செய்யும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 60 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் (45 நாட்கள் முழு ஊதிய விடுப்பு மற்றும் 15 நாட்கள் அரை ஊதிய விடுப்பு). பிரசவத்திற்குப் பிறகு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், 60 நாட்களுக்கு பிறகு, பணியாளர்கள் (மகப்பேறு பெண்) கூடுதலாக 45 நாட்கள் ஊதியம் இல்லாத விடுப்பைத் தேர்வு செய்யலாம்.
துக்க விடுப்பு எவ்வளவு நாள் கிடைக்கும்?
இறந்தவரின் உறவு நிலையை பொருத்து பணியாளருக்கு 3 முதல்5 நாட்கள் வரை விடுமுறை கிடைக்கும்.
ஒரு தொழிலாளி முன்னறிவிப்பு இல்லாமல் தனது வேலையை ராஜினாமா செய்ய முடியுமா?
முடியும் , ஒரு முதலாளி தனது ஊழியருக்கு செய்யும் கடமையை தவறும்பட்சத்தில் அந்த விதிமீறல் பற்றி பணியாளர் (MOHRE) க்கு அறிவித்த 14 நாட்களுக்குள் அத்தகைய மீறலை சரிசெய்யத் தவறினால் அல்லது வன்முறை , துன்புறுத்தல் ஏற்பட்டால் பணியாளர் வேலையை ராஜினாமா செய்ய முடியும்.
புதிய தொழிலாளர் சட்டத்தை மீறினால் என்ன நடக்கும்?
இந்த புதிய தொழிலாளர் சட்டத்தை மீறினால் முதலாளிகளுக்கு அல்லது அந்த நிறுவனத்திற்கு AED1,000,000 வரை அபராதம் விதிக்கலாம். இந்த விதிமீறல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அபராதம் இரட்டிப்பாகும்.
பணியாளருக்கு நெகிழ்வான வேலை & பகுதி நேர வேலை :
முந்தைய தொழிலாளர் சட்டத்தில் ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம், வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்றும்,புதிய UAE சட்டம் ஊழியருக்கு (ஒப்பந்தங்கள் அனுமதித்தால்) ஒரு வாரத்தில் 40 மணிநேரம் வேலை செய்ய ஒரு விருப்பத்தை வழங்குகிறது.
புதிய தொழிலாளர் சட்டத்தால் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உண்டா ?
முதலாளிகள் தொழிலாளர்களிடம் அதிகார சக்தியைப் பயன்படுத்தக் கூடாது. பணியிடத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு சிறப்பு நோக்கத்துடன், பாலியல் துன்புறுத்தல், கொடுமைப்படுத்துதல் அல்லது அவர்களது மேலதிகாரிகள் அல்லது சக ஊழியர்களால் தொழிலாளர்களுக்கு எதிரான எந்தவொரு வாய்மொழி, உடல் அல்லது உளவியல் வன்முறை, இனம், நிறம், பாலினம், மதம், தேசியம் அல்லது இயலாமை ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவிதமான பாகுபாடுகளையும் புதிய தொழிலாளர் சட்டம் தடைசெய்கிறது.
Comments