
ஜித்தா: ஜித்தாவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில், திருரங்காடி பி.எஸ்.எம்.ஓ. கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 18வது ஆண்டு விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை இந்திய துணை தூதரகத்தின் கான்சல் (ஹஜ்) திரு. முகமது அப்துல் ஜலீல் தொடங்கி வைத்தார். அபீர் மருத்துவக் குழுமத்தின் டாக்டர். அகமது ஆலுங்கல் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சீதி கோலக்காடன் தலைமை தாங்கினார். அமர் மனரிகல், சலா கராடன் , அப்துல்லா குட்டி ஏ. எம், சித்திக் ஓலாவத்தூர், ரஹூப் எம். பி. , ரஷீத் ஆகியோர் பேசினர். பொதுச் செயலாளர் அஷ்ரப் குன்னத் வரவேற்பு மற்றும் அஷ்ரப் அஞ்சலன் நன்றி தெரிவித்தனர்.

தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த கல்லூரி முன்னாள் மாணவர் மற்றும் பட்டுருமால் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த பீரோஸ் பாபு மற்றும் சினிமா பின்னணி பாடகி டானா ராசிக் ஆகியோரின் இன்னிசை கச்சேரி வழங்கினர்.

பழைய மற்றும் புதிய பாடல்களைப் பாடி பீரோஸ் வந்திருந்தவர்களை பரவசப்படுத்தினார்.
இளம் தலைமுறை பாடகரான டானா ராசிக் தனது பிரசித்தி பெற்ற பாடல்களால் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். ஜமால் பாஷா, சோபியா சுனில், மும்தாஸ் அப்துராஹிமான் ஆகியோரும் இவர்களுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியை குதூகலப்படுத்தினர்.
பிஎஸ்எம்ஓ கல்லூரியின் முன்னாள் மாணவர்களான ஜாபர் மேலேவீட்டில், டாக்டர். ஃபைசல் போன்றோரின் தலைமையின் கீழ், திரைப்படப் பாடல்கள், மாப்பிளைப் பாட்டுகள் மற்றும் நாட்டுப்புற பாடல்களின் இணைப்பாக வழங்கப்பட்ட முட்டிபாட் பியூஷன் நிகழ்ச்சி ஜித்தா மக்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
சீதி கோலக்காடன், ரஹூப் எம்.பி, பஷீர் அச்சம்பாட்டு, ஷமீம் தாபி, ரஹமதலி, அனஸ் பந்தகல், ஹசீப் பூங்கடன், யூனுஸ் பாக்கடா, அப்துல் கஃபூர் ஆகியோரைக் கொண்ட குழு முட்டிபட் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நஜீப் வெஞ்சாரமூடு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அன்புடன் M.சிராஜ்
Comments