top of page

சவுதி ஜெத்தாவில் 4 தமிழர்கள் & வட மாநிலத்தை சேர்ந்தவர் 1வரும் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Writer's picture: RaceTamil NewsRaceTamil News

சவுதி அரேபியா ஜெத்தாவில் 4 தமிழர்கள் மற்றும் 1 வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 12.09.2023 அன்று தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



ஜெத்தா நகரில் பணியாற்றி வந்த நிலையில் நிறுவனம் மூடப்பட்டு இக்காமா கலாவதியாகி சம்பளம் வழங்கப்படாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்து கர்ணன், அருண்ராஜ்,பஜ்ருதீன், மலைச்சாமி மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பவன் சிங் ஆகியோர் ஜெத்தா தமிழ்ச் சங்கம் பொறியாளர் காஜா மைதீன் அவர்களிடம் முறையிட்டு தங்கள் பிரச்சினைக்கு தீர்வு வேண்டி கோரிக்கை வைத்தனர். உடனடியாக பொறியாளர் காஜா மைதீன் அவர்கள் பணியாற்றிய நிறுவனம் மற்றும் துணைத் தூதரகத்தின் கவனத்திற்கு சென்று பெரும் முயற்சி எடுத்து தேவையான ஏற்பாடுகளை செய்து ஆவணங்கள் மற்றும் சம்பள நிலுவை பயணச்சீட்டு உள்ளிட்ட அனைத்தையும் பெற்று தந்தார். அவருடன் இணைந்து சவுதி அரேபியா NRTIA பொறுப்பாளர் திரு பிரேம் நாத் அவர்களும் தேவையான பயண ஏற்பாடுகளை செய்தார்.



12.09.2023 அன்று ஜெத்தாவில் 5 நபர்களும் விமான நிலையத்தில் இருந்து தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமான நிலையத்திற்கு உடன் சென்று திரு. பேரரசு, திரு.ராஜசேகரும் வழியனுப்பி வைத்தனர்.


தாயகத்திற்கு அனுப்பி வைக்க பெரும் முயற்சி எடுத்த ஜெத்தா தமிழ்ச்சங்கம் பொறியாளர் காஜா மைதீன் அவர்கள் மற்றும் NRTIA பொறுப்பாளர் திரு பிரேம் நாத் அவர்களுக்கும் ஜெத்தா தமிழ்ச்சங்கம் மற்றும் சவுதி அரேபியா NRTIA க்கும் பயணம் சென்ற ஐவரும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.


ஜெத்தா தமிழ்ச் சங்கம் - JTS



453 views0 comments

Comments


bottom of page