
ஹெல்மேன் உலகளாவிய தளவாட நிறுவனம் சவூதி அரேபியாவில் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் , தொழிலாளர்களுக்கும் உணவுக்காக கஷ்டப்படுபவர்களுக்கும் உதவி செய்கிறார்கள் மற்றும் உணவு இல்லாமல் சிரமமான தொழிலாளர் முகாமை ஆதரிப்பதும் அவர்கள் வழக்கம்.

அவர்கள் அனைத்து இந்திய சமூகத்திற்கும் ரமலான் உணவு மளிகை பொருட்கள் விநியோகம் செய்ய உதவுகிறார்கள், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் அமைப்பின் ஒத்துழைப்போடு ரியாதில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, காலித்யா விவசாய பண்ணை தொழிலாளர்களுக்கு அடையாளம் கண்டு, 06.04.2024 ரியாத்தில் சமூக நல்லிணக்க ரமலான் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் மற்றொரு பகுதியாக, வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் அமைப்பின் ரியாதில் உதவியுடன் இலங்கை தமிழ் சமூகப் பெண்கள் வேலையின்றி மற்றும் ஸ்பான்சர்கள் பிரச்சனை தவிக்கும் பெண்களை அடையாளம் கண்டு, 07.04.2024 ரியாத்தில் சமூக நல்லிணக்க ரமலான் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஹெல்மேன் நிறுவனத்தின் நிகழ்வில் திரு.ஹிஷாம், திரு.ஷெஃபின், திரு. ரெஜின், திரு. ஷாஹின், திரு. இஷாக், திரு. சையத், திரு. இப்ராஹிம் மற்றும் திரு.அப்துல்லா,ஊழியர்கள் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு உணவுப் பொருட்களை வழங்கினர் மற்றும்
இந்த நிகழ்ச்சியை NRTIA
துணை அமைப்பாளர் டாக்டர் சந்தோஷ் பிரேம் வின்பிரட், ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன்,
துணை ஒருங்கிணைப்பாளர் திரு. வசிம் ராஜா,
துணை ஒருங்கிணைப்பாளர் சரவணன்,
தலைவர் ஆயப்பாடி ஜாகீர் உசேன்,
துணை தலைவர் ஷேக் ஒலி,,
செயலாளர் சாமிதுரை,
இளைஞர் அணி செயலாளர் அப்துல் ரஹ்மான்,
பொருளாளர் ஆறுமுகம்,
கொள்கை பரப்பு செயலாளர் ஷாஜகான் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
அன்புடன் சிராஜ்
Comments