முகம்மது சதக் பொறியியல் கல்லூரி (MSEC), கீழக்கரை தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவை நினைவுபடுத்தும் வகையில் சவூதி அரேபியாவில் வசிக்கும்,முகம்மது சதக் பொறியியல் கல்லூரி (MSEC), கீழக்கரை முன்னாள் மாணவர்கள் (அலும்னி) ஒன்று கூடலை கடந்த 15 நவம்பர் 2024 அன்று ரியாத் மாநகரில் நடத்தினர்.
சுமார் 50 முன்னாள் மாணவர்கள் இதில் கலந்து கொண்டு, தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன், பல்வேறு புதிய முயற்சிகளுக்கு நிகழ்ச்சி அடித்தளமாகவும் அமைந்தது.
நிகழ்வில் 1991 ஆம் ஆண்டின் முன்னணி முன்னாள் மாணவர்கள் திரு. முஹைதீன் மற்றும் திரு. சம்சுதீன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். அவர்கள், பல்வேறு தொழில் துறைகள் மற்றும் சமூக சேவையின் முக்கியத்துவம் முன்னோடியாகக் கொண்டு கருத்துக்களை பகிர்ந்து, முன்னாள் மாணவர்களிடையே இணைப்புகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்கள்.
இந்த ஒன்று கூடல், முன்னாள் மாணவர்களுக்கு தங்கள் பழைய நண்பர்களுடன் மறுமுறை சந்திக்கும் வாய்ப்பாக இருந்ததுடன், தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் தொழில் துறையில் முன்னேற்றம் பெறுவதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியது.
நிகழ்வின் முக்கிய அம்சங்களாக...
தொழிலதிபர்கள் தங்கள் தொழில் சார்ந்த அனுபவங்களை பகிர்ந்தனர்.
சவூதி அரேபியாவில் உள்ள முக்கிய ப்ராஜெக்ட்களில் பணிபுரியும் பொறியாளர்கள் தங்கள் திட்ட அனுபவங்களை பகிர்ந்தனர்.
தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான உந்துதல்கள் மற்றும் சவூதியில் உள்ள வேலை வாய்ப்புகளை பகிர்ந்தனர்.
மேலும் ஒவ்வொருவரும் சமூக சேவையில் தங்களை ஏதாவது ஒரு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வலியுறுத்தினர்.
இறுதியில் நிகழ்வை வெற்றிகரமாக நடத்த தன்னார்வத்துடன் பணியாற்றிய அனைவருக்கும் MSEC KSA ALUMNI ஒருங்கிணைப்பாளர்கள் நன்றி தெரிவித்தார்கள். கூட்டத்தின் நிறைவாக இராவுணவு மற்றும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் நேரத்துடன், சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்தும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அன்புடன் M. Siraj
Comentarios