
ரியாத் தமிழ்ச்சங்கத்தின் எழுத்துக்கூடம் - இலக்கிய வட்டம் சார்பில் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு கடந்த 07மார்ச்2024 அன்று அல்மாஸ் அரங்கில் ரியாத் தமிழ்ச் சங்கத் தலைவர் வெற்றிவேல் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது.

ஒருங்கிணைப்பாளர் ஜியாவுத்தீன் முன்னெடுத்து வரவேற்புரை நல்க இந்நிகழ்வை ஷாஜி ஷேக் முஹம்மது தொகுத்து வழங்கினார்.

செயலாளர் ஷமீம் மகுதூம், துணைத் தலைவர் ஆரிப் அப்துல் சலாம், பொருளாளர் ராம் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்த நிகழ்வில் சிறுகதைப் போட்டி குறித்த அனுபவத்தை கவிஞர் இப்னு ஹம்துன் பகிர்ந்துகொண்டார்.

முன்னாள் தலைவர் ஹைதர் அலி, செயற்குழு உறுப்பினரும் இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளருமான நரேஷ்குமார் ஆகியோர் நூல் குறித்த மதிப்புரை தந்தனர்.

சமரசம் ஆசிரியர் குழுவின் உறுப்பினர் மருத்துவர் முஹையதீன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாசிப்பின் தேவையையும் இலக்கியம் என்பது அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.நூலில் இடம்பெற்ற கதைகளில் இழையோடும் சமூகச் செய்திகளையும் அவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

துணைத்தலைவர் ஆரிப் அப்துல் சலாம் கருத்துரை வழங்க, சிறப்பு விருந்தினருடன் தலைவர் வெற்றிவேல் முன்னாள் தலைவர் ஷேக் தாவூத் ஆகியோர் நூலை வெளியிட்டுச் சிறப்பு செய்தனர்.
செயற்குழு உறுப்பினர்கள் ஷேக் தாவூத், சிவராமலிங்கம், ஜாஃபர் சாதிக், இர்ஷாத் இப்ராஹிம், மாதவன், செந்தில்குமார், அலெக்ஸ், கபீர், அபுபக்கர் சித்தீக், ராஷித் அஹ்மது, மதி சங்கிலிமுத்து, நரேஷ்குமார், ஆரோக்கிய தாஸ், யூசுஃப், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செயலாளர் ஷமீம் மகுதூம் நன்றி உரைக்க, இரவு உணவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
Comentários