top of page

மரம் நடு - மழை பெறு ஜித்தா தமிழ் சங்கத்தின் முன்முயற்சி

Writer's picture: RaceTamil NewsRaceTamil News



மரம் நடுவதை ஒரு லட்சியமாக எடுத்து கொண்ட ஜெத்தா தமிழ்ச் சங்கம், கலாம் இளம்தளிர், அல்ஹசா தமிழ்ச் சங்கம், ரியாத் தமிழ் குழுமம், அல் பஹா தமிழ்ச் சங்கம் & முகை தன்னார்வலர்களுடன் இணைந்து 300 மரக்கன்றுகள் சென்னையில் 3 வெவ்வேறு இடங்களில் நட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


முதல்கட்ட நிகழ்வாக அயப்பாக்கம் குடியிருப்பு பகுதியில் 100 மரக்கன்றுகள் இந்த மாதம் (ஜூலை) 1 & 2 ம் தேதிகளில் மக்கள் ஆதரவுடன் வெகு விமர்சியாக நடப்பட்டன.


மரம் நடுவதன் முக்கியத்தை குழந்தைகளுக்கு புரியவைப்பதனின் அடிப்படையில் பெண்களையும் குழந்தைகளையும் இதில் ஈடுபடுத்தி உற்சாகப்படுத்தினர்.


அடுத்ததாக அரசு பள்ளி காட்டுப்பாக்கத்தில் 100 மரக்கன்றுகள் நடப்படும்.



மூன்றாவதாக 100 மரக்கன்றுகள் சூரப்பேடு குடியிருப்பு பகுதிகளில் நடப்படும். விவரங்கள் பின்பு அறிவிக்கப்படும்.


மரக்கன்றுகள் நட பொருளுதவி அளித்த ஜித்தா தமிழ்ச் சங்கம், இளம்தளிர், அல் ஹஸா தமிழ்ச் சங்கம், ரியாத் தமிழ் குழுமம், அல்பஹா தமிழ்ச் சங்கம் மற்றும் நல்லுள்ளங்களுக்கும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நண்பர்களுக்கும் குடியிருப்புவாசிகள் அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.




168 views0 comments

Comments


bottom of page