துபாயில் லேப்டாப் மொபைல் போன்களை திருடிய நபர் துபாய் விமான நிலையத்தில் சிக்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
துபாய் ஃப்ரீஸோனில் அமைந்துள்ள ஒரு கப்பல் நிறுவனத்தின் குடோனில் இருந்து 233 மொபைல் போன்கள் மற்றும் 25 மடிக்கணினிகளைத் திருடியதற்காக உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த நான்கு வெளிநாட்டவரை துபாய் காவல் துறை கைது செய்துள்ளது.
திருடப்பட்ட பொருட்களில் ஐபோன்கள், சாம்சங் கேலக்ஸி போன்கள் மற்றும் மேக்புக்ஸ் ஆகியவை அடங்கும்.
இதுகுறித்து காவல்துறை அறிக்கையின்படி, மே 15 அன்று நிறுவனத்தின் மேலாளர் திருட்டு குறித்து துபாய் விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடனே குற்றப் புலனாய்வு அதிகாரிகள் திருட்டு நடந்த இடத்திற்கு வந்து சிசிடிவி கேமராக்களை பார்வையிட்டுள்ளார்கள்,
அதில் பிற்பகல் 2 மணியளவில் கிடங்கின் ஷட்டரை குற்றவாளிகள் நெம்புகோலைப் பயன்படுத்தி திறப்பதும், குடோனில் நுழைந்தவர்கள் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, திருட்டுப் பொருட்களுடன் குடோனில் இருந்து வெளியே வந்த கும்பல் பொருட்களை ஜிஎம்சி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சி சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, போலீஸார் விசாரணை நடத்தி சந்தேக நபர்களை அடையாளம் கண்டு பிடித்து விசாரித்து வந்துள்ளார்கள் . அந்த சமயம் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளிகளில் ஒருவர் துபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். உடனே அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும், மற்ற உறுப்பினர்களின் இருப்பிடத்தை காவல்துறைக்கு தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார், பொது வழக்கறிஞரிடம் ஒப்படைத்தனர்.
Comments